மூளை செயல்பாட்டைக் குறைக்கும் சர்க்கரை நோய்
Page 1 of 1

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பல்வேறு உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதை அறிந்து வந்துள்ளோம்.
ஆனால், தற்போது சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மூளை செயல்பாடு, செயல்திறன் வேகம் குறையும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தகவல்களை எளிதில் கிரகித்துக் கொள்ளவும், சுருக்கமாக யோசிக்கவும் சர்க்கரை நோயாளிகள் சிரமப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுமார் 465 ஆண் மற்றும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. அவர்களில் 41 பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும், 41 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் நினைவாற்றல், கற்றல் திறன், செயல்பாட்டுத் தன்மை போன்றவை பரிசோதிக்கப்பட்டது.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கண்டறியப்பட்டதாகவும், அதில் மூளை செயல்திறன், வேகம் போன்றவையும் அடங்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு வார்த்தை கொண்ட வாக்கியத்தை பூர்த்தி செய்வதற்குக் கூட தாமதம் ஏற்பட்டதாகவும், ஆரோக்கியமாக உள்ளவர்கள் விரைந்து முடித்ததாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சிறு வார்த்தையைக் கூட படிப்பதற்கு சர்க்கரை நோய் உடையவர்கள் தாமதம் காட்டியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
எந்த வகையில் சர்க்கரை நோய் மூளை செயல்திறனைப் பாதிக்கிறது என்று சரிவரத் தெரியாவிட்டாலும், சர்க்கரை நோயின் தாக்கத்தால், இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சுலின் பயன்படுத்துதல், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மாற்றத்தால் மூளை செயல்திறன் பாதிப்பு இருக்கக்கூடும் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூளை செயல்பாட்டைக் குறைக்கும் சர்க்கரை நோய்
» ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது!

» சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்
» பலம் குறைக்கும் எலும்பு புரை நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum