குழந்தை இடைவெளி குறைவால் பெண்கள் பாதிப்பு
Page 1 of 1

இந்தியாவில் ஒரு குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே அதிகபட்சமாக 31 மாத கால இடைவெளி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு இடையே குறுகிய கால இடைவெளியால் பெண்களின் உடல் நிலையில், பாதிப்பு ஏற்படுவதுடன் பிறக்கும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் ௦கடந்த 17 ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
முதல் குழந்தை பிறந்த பின்னர் அடுத்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது 3 ஆண்டுகளாவது இடைவெளி அவசியம். அப்படி இல்லாதபட்சத்தில், இரண்டாவதாக வளரும் கருவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, உரிய காலத்திற்கு முன்பே குழந்தை பிறக்கக்கூடிய நிலையும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை பிறந்து 6 மாத காலத்திற்குள் மீண்டும் கரு உருவானால், குறைந்த எடையுடனும், அல்லது குறை மாதத்திலும் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஏற்கனவே வெளியான ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷில் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு இடையேயான காலம் 39 மாதம் என்றும், இந்தோனேஷியாவில் இது 54 மாதம் என்றும் யுனிசெப் அமைப்பின் சார்பில் வெளியான உலக குழந்தைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே நேபாளத்தில் 34 மாதங்களாகவும், வியட்நாமில் 47 மாதங்களாகவும் இருந்தது.
ஒரு பெண் முதலாவது குழந்தை பிறந்த பின், மீண்டும் ஆரோக்கியமான உடல் நிலையை எட்டுவதற்கு குறைந்தது 2 ஆண்டுளாவது ஆகும் என மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
இந்தியாவைப் பொருத்தவரை 52 விழுக்காடு பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல் ஊட்டச்சத்தினை இழந்து காணப்படும்.
முதல் குழந்தைக்கு 2 ஆண்டுகள் வரை பாலூட்டும் ஒரு தாய், 30 மாதத்திற்குள் அடுத்த குழந்தையை சுமப்பதால், ஊட்டச்சத்து பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை குழந்தை பிறப்பை தடுப்பதற்கான வழிமுறைகளாக கருத்தடை மாத்திரைகள் அல்லது ஆணுறைகள் இருந்து வருகின்றன.
இந்தியாவில் சமீபத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, டெல்லிவாழ் மக்களில் 34 விழுக்காட்டினர் குடும்பக்கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தை இடைவெளி குறைவால் பெண்கள் பாதிப்பு
» வைட்டமின்-டி குறைவால் சிறுமிகள் பாதிப்பு

» விட்டமின் டி குறைவால் மூளை செயல்திறன் பாதிப்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum