தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விட்டமின் டி குறைவால் மூளை செயல்திறன் பாதிப்பு?

Go down

விட்டமின் டி குறைவால் மூளை செயல்திறன் பாதிப்பு? Empty விட்டமின் டி குறைவால் மூளை செயல்திறன் பாதிப்பு?

Post  meenu Mon Feb 11, 2013 5:16 pm

வயதானவர்களுக்கு `விட்டமின் டி' குறைபாடு ஏற்படுவதால், மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த சத்துகள் வைட்டமின் டி-யில் உள்ளன. எனவே வைட்டமின் டி குறைவதால் உடலியக்க செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

சூரிய ஒளி நேரடியாகப் படுதல், எண்ணெயில் பொறித்த மீன், பால், செரியல், சோயா பானங்கள் போன்றவற்றில் விட்டமின் டி அதிகம் உள்ளது.

வயதானவர்களைப் பொருத்தவரை அவர்களின் தோலானது சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யை கிரகித்துக் கொள்ளும் தன்மையை இழக்க நேரிடும். எனவே வயதானவர்களுக்கு வைட்டமின் டி-யானது உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்க வேண்டிய நிலை உள்ளது.

வயதானவர்களின் மூளை செயல்பாட்டை பரிசோதித்ததில், அவர்களில் பெரும்பாலானோருக்கு நினைவுத்திறன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே விட்டமின் டி குறையாமல் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum