தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொலு டிப்ஸ்

Go down

கொலு டிப்ஸ் Empty கொலு டிப்ஸ்

Post  amma Sun Jan 13, 2013 2:35 pm


நவராத்திரி கொலுவில் வைக்க, புத்தம் புதிய பொம்மைகள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை. நிறம் மங்கிய பழைய பொம்மைகளை ஏதேனும் ஒரு அடர்த்தியான கலரில் பெயிண்ட் அடித்து, புதுப்பித்து பயன்படுத்தலாம்.

* கொலுவில் சாம்பிராணியை சின்ன டப்பாக்களில் ஆங்காங்கே வைத்தால், பார்க்க நன்றாகவும் இருக்கும், நல்ல மணமாகவும் இருக்கும். எந்தப் பூச்சியும் கொலு வைத்திருக்கும் இடத்தை அண்டாது.

* நவராத்திரி கொலுவில் பூங்கா போன்று செட் போடும் போது, கீழே கனமான பிளாஸ்டிக் பேப்பரை போட்டு, அதன் மீது மண்ணை போட்டு பரப்பவும், மரத்தூளோடு, பச்சைக்கலரை கலந்து, அதை மண்ணில் தூவி விட்டால் புல்வேளி போல் பசுமையாக அழகாக இருக்கும்.

* தினமும் கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை எல்லாம் முடிந்தவுடன் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து யார் காலும் படாத இடத்தில் செடியில் ஆரத்தி தண்ணீரை ஊற்றவும்.

* கொலுவுக்கு வருபவர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கலாம். சுண்டல், ஐஸ்க்ரீம், இனிப்பு, கார வகைகள், ஸ்டிக்கர் பொட்டு ஆகியவற்றை வழங்கினால் விருந்தினர்களும் சந்தோஷமாக செல்வார்கள்.

* கொலுவில் மலை அமைக்க, மண் கொட்டி கஷ்டப்பட வேண்டாம். மண்ணை கரைத்து ஊற்றி காய்ந்த பழைய துணியை நான்கு குச்சிகள் மீது வைத்தால் மலை போல் இருக்கும். தேவையான இடத்தில் மண்ணைத்தூவி கொள்ளலாம்.

* கொலுவுக்கு வரும் விருந்தினர்களுக்கு புது பொம்மைகளை தாம்பூலத்துடன் சேர்த்து வழங்கினால், பொம்மைகள் சேரும். விருந்தினர்களுடன் வரும் குழந்தைகளும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வார்கள்.

* கோவிலில் சந்தனக் காப்பு செய்து, பூஜை முடிந்த பிறகு கலைத்த சந்தனத்தை பிள்ளையார் போல் செய்து கொலுவில் வைத்து வணங்கினால், திருமணமாகாத பெண்களுக்கு திருமண யோகம் கிட்டும்.

* முன்பெல்லாம் வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள், கொலுவில் எப்போதும் இடம் பெறும் மரப்பாச்சியிலான பொம்மைகள் இடம் பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum