தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காவல‌ரி‌ன் உடல் உறுப்புகள் தானம்

Go down

காவல‌ரி‌ன் உடல் உறுப்புகள் தானம்  Empty காவல‌ரி‌ன் உடல் உறுப்புகள் தானம்

Post  meenu Mon Feb 11, 2013 4:21 pm

சென்னையில் சாலை விபத்தில் மூளை செய‌ல் இழ‌ந்து‌வி‌ட்ட காவ‌ல‌ரி‌ன் இதயம் உள்பட உடல் உறுப்புகளை அவரது மனை‌வி தானமாக கொடுக்க மு‌ன்வ‌ந்தா‌ர்.

சென்னை மைலாப்பூர் கச்சேரி சாலை‌யி‌ல் கடந்த 23-ந் தேதி அன்று நட‌ந்த சாலை ‌விப‌த்‌தி‌ல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு, நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த 2 பேரும் காவல‌ர்க‌ள் ஆவார்கள்.

சந்துரு (வயது 27), துரைமுருகன் ஆ‌கிய இரு காவல‌ர்களுமே பலத்த காயம் அடைந்து மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காவல‌ர் சந்துரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது தலையில் ஏ‌ற்ப‌ட்ட காய‌த்தா‌ல், அவரது மூளை செயல் இழந்து விட்டது என்றும், அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றும் மரு‌த்துவ‌ர்க‌ள் கூறி விட்டனர். இதனால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்றும் உறவினர்களிடம் மரு‌த்து‌வ‌ர்க‌ள் கூறினார்கள்.

சந்துருவுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி ஜமுனா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். கணவனை இழக்கப்போவது தெரிந்த ஜமுனா கதறி அழுதார். அந்த சோகமான சூழ்நிலையிலும் தனது கணவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தார்.

தனது கணவர் தனது வயிற்றில் குழந்தையாக வாழ்வதோடு மட்டும் அல்லாமல், மேலும் பலருக்கும் வாழ்வு கொடுக்கட்டும் என்று ஜமுனா பெருந்தன்மையோடு சம்மதம் சொன்னார்.

இதன்பேரில் நேற்று முன்தினம் இரவு காவல‌ர் சந்துருவின் இதயம், கண்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் அறுவை ‌சி‌கி‌ச்சை மூலம் எடுக்கப்பட்டன. அவற்றை உட‌ல் உறு‌ப்புக‌ள் தேவை‌ப்படுவோரு‌க்கு மரு‌த்துவ‌ர்க‌ள் பொரு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ச‌ந்துரு‌வி‌ன் உட‌ல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள ஆவுடையனூர் கிராம‌த்‌தி‌ற்கு கொ‌‌ண்டு செல்லப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum