உயிரியலில் முக்கியக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு
Page 1 of 1

உயிரியலில் இதுவரை புரியாத புதிராக இருந்த ஒரு மூலக் கூறை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகளான எலிசபத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர், ஜேக் ஸோஸ்டாக் ஆகியோருக்கு 2009ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
செல்கள் பிரியும் போது அது எவ்வாறு குரோமோசோம்களை முழுவதும் பிரதி எடுக்கிறது என்பது பற்றியும், மேலும் குரோமோசோம்கள் எவ்வாறு அழிவிலிருந்து தற்காத்துக் கொள்கின்றன என்பதையும் இந்த 3 விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உயிரியல் விஞ்ஞானத்தின் புரியாத புதிருக்கு விடை கண்டுள்ளனர்.
FILE
அதாவது குரோமோசோம்களின் முனையில் 'டெலோமியர்ஸ்' (Telomeres) என்ற ஒன்று குரோமோசோம்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதாகவும், இந்த டெலோமியர்ஸ் என்பதை டெலோமெரேஸ் (Telomerase) என்ற சுரப்பி உருவாக்குவதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டி.என்.ஏ. உயிரணுக்கள் என்ற நீளமான நூல் போன்ற அமைப்பு மரபணுவை சுமந்து செல்கிறது. இது குரோமோசோம்கள் என்பதனுள் அடைத்து வைத்து பாதுகாக்கிறது. இதன் முனையில் தொப்பி போன்ற ஒன்று உள்ளது இதுதான் டெலோமியர்ஸ் என்பதாகும்.
டெலோமியர்ஸ் என்ற கிரேக்க சொல் டெலோ மற்றும் மெரோஸ் என்பதன் கூட்டு வடிவமாகும். அதாவது டெலோ என்றால் முடிவு, மெரோஸ் என்றால் பகுதி. அதாவது முடிவுப்பகுதி அல்லது முனைப் பகுதி என்ற பொருள் உடையது.
இந்த டெலோமியர்ஸ் இல்லாமல் செல்கள் பிரிகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்னவாகும் எனில் குரோமோசோம்களை அது இழந்துவிடும். இதனால் அதில் உள்ள தகவல்களும் அழிந்து போகும்.
Elizabeth H. Blackburn
FILE
செல்கள் பிரியும் போது குரோமோசோம்களை பிரதியெடுக்கும் சுரப்பிகளும் இதன் டி.என்.ஏ.யும் தொடர்ந்து குரோமோசோம்களின் முனை வரை பிரதியெடுக்க இயலாமல் போய்விடும்.
எலிசபத் பிளாக்பர்ன், குரோமோசோம்களின் முனைகளில் தடுப்புக் காவலனாக இருக்கும் இந்த டெலோமியர்ஸ் என்பதை நம் ஷூ நாடாக்களின் முனையில் உள்ள ஒரு துருத்தி போன்ற அமைப்புடன் ஒப்பிடுகிறார். இதுதான் செல் பிரிவின் போது குரோமோசோம்கள் அழியாமல் காக்கிறது என்றும் இந்த டெலோமியர்ஸை உருவாக்குவது டெலோமெரேஸ் என்ற சுரப்பி என்றும் கண்டுபிடித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிரியலில் முக்கியக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு
» நோபல் பரிசு
» நோபல் பரிசு
» நோய் எதிர்ப்பு சக்தி: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum