புது அம்மாவிற்கு ஏற்ற மசாஜ்! உடம்பை ரிலாக்ஸ் ஆக்கும்!
Page 1 of 1

Body Massage
பிரசவத்திற்குப் பின்னர் பெண்களின் உடல் தளர்ந்து போயிருக்கும். உடல் சோர்வாக இருப்பதோடு சில பெண்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருக்கும். அவர்களுக்கு சத்தான ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுப்பதோடு மசாஜ் செய்வதன் மூலம் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் ஆக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
ரிலாக்ஸ் செய்யுங்கள்
குழந்தை பிறந்த உடன் அவர்களை நன்றாக கவனிக்கவேண்டுமே என்ற கவலை பெண்களை பீடித்துக்கொள்ளும். இதுவே மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விடும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தளர்வடைந்து போயிருப்பவர்களுக்கு மசாஜ் சிறந்த நிவாரணியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் வலியை போக்குங்கள்
பிரசவத்தின் போது ஏகப்பட்ட உதிரப்போக்கு இருந்திருக்கும். இதனால் சத்துக்கள் குறைந்து உடல் வலி பின்னி எடுக்கும். பாதங்களிலும், தொடைகளிலும் வலி தெறிப்பதோடு தோள்களிலும் முதுகுப் பகுதிகளிலும் வலி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு மசாஜ் செய்வது உடல் வலியை சற்றே குறைக்கும். உடலில் ஆங்காங்கே மெதுவாக பிடித்து விட்டு மசாஜ் செய்துவிடுங்களேன். கணவர் இதை செய்து விடலாம். பெண்களுக்கு உடனடி ரிலீப் கிடைக்கும்.
ரத்தம் உடலில் பாயும்
பாடி மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் நன்றாக பாயும். இதனால் ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சப்ளை ஆவதால் உடல் வலி குறையும். அதோடு மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்குமாம். மார்புப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வதால் அதன் காம்புப் பகுதியில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்குவதோடு அதிக அளவில் பால் சுரக்கும்
உடல் அழகாகும்
பிரசவத்தினால் தசைகள் தளர்ந்து போயிருக்கும். அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்வதால் தசைகள் இருகும். உடலானது படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பும். அதோடு ஆங்காங்கே கொழுப்புகள் சேர்ந்துள்ள பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் அவை கரைந்து எடை குறைவதோடு உடல் சிக் என்று மாறிவிடும். மேலும் தழும்புகள் இருக்கும் பகுதிகளில் ஆயில் விட்டு மசாஜ் செய்வதன் மூலம் பிரசவ தழும்புகள் மறையும்.
பிரசவத்திற்குப் பின்னர் மசாஜ் செய்வதனால் உடலானது பழைய நிலைக்கு திரும்பும் என்றாலும் சிசேரியன் செய்தவர்கள் தையல் காய்ந்து பிரிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் மிதமான வெந்நீரில் குளிக்கவேண்டும். மசாஜ் செய்த பின்னரும் வெந்நீரில் சில துளி எலுமிச்சையை சேர்த்து குளிக்கலாம். உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடீஸ்வரர் ஆக்கும் சிறுதொழில்கள் (100 தொழில்கள்)
» ரிலாக்ஸ் ப்ளீஸ் ரிலாக்ஸ் ப்ளீஸ்
» உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்
» பில்லா 2 - ரிலாக்ஸ் அஜீத்
» உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
» ரிலாக்ஸ் ப்ளீஸ் ரிலாக்ஸ் ப்ளீஸ்
» உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்
» பில்லா 2 - ரிலாக்ஸ் அஜீத்
» உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum