தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் 'மம்மி டாடிகள்'!
Page 1 of 1

Baby in Cradle
இன்றைய அவசர உலகத்தில் பெற்ற பிள்ளையைத் தாலாட்டு பாடி தூங்க வைக்கக் கூட தாய்க்கு நேரமில்லை. அதனால் தாயின் வேலையை டிவிடிக்கள் செய்ய ஆரம்பித்துள்ளன.
கிராமத்து வீடுகளுக்குப் போனால் சுவாரஸ்யமான தாலாட்டுக் காட்சிகளைப் பார்க்கலாம். அம்மா ஏதாவது வேலையாக இருப்பார், அவரது கைக்குழந்தை தூளியில் நெளிந்தபிட அழ ஆரம்பிக்கும். வேலையையும் விட முடியாது, குழந்தையிடமும் போக முடியாது. என்ன செய்வார் அந்த்த தாய்?
தூளியுடன் சேர்த்துக் கட்டியுள்ள கயிற்றை தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே பிடித்து மெதுவாக ஆட்டியபடி தாலாட்டுப் பாடலை எடுத்து விடுவார். ஆராரோ ஆரிராரோ, யாரடிச்சு நீ அழுத, அத்தை அடிச்சாரா அரளிப் பூ செண்டாலே, மாமன் அடிச்சாரோ மல்லிப் பூ செண்டாலே என்று அவர் குரல் எடுத்துப் பாடும் போது அதை மெய் மறந்து கேட்டபடி குழந்தை மீண்டும் கண்மூடித் தூங்க ஆரம்பிக்கும்.
நகர்ப்புறங்களில் இந்த மாதிரியான பாடல்களை இப்போது கேட்கவே முடிவதில்லை. பெண்களுக்குக் குரல் வளமோ, பாடல் அறிவோ இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் இப்போது தெரிவதில்லை, தெரிந்தாலும் கூட பாடுதவற்கு நேரமில்லை.
இன்றைய காலகட்டத்தில் கணவனும், மனைவியும் வேலைக்குப் போனால் தான் வாழ்க்கையை சிரமமின்றி ஓட்ட முடிகிறது. அதனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. யாராவது ஒரு ஆயாவிடமோ அல்லது அக்கம் பக்கத்தினரிடமோ, பணத்தைக் கொடுத்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் குழந்தையை தூக்கி வரும் தாய் அதை தாலாட்ட நேரமில்லாததால் தொட்டிலில் போட்டு டிவிடியை ஆன் செய்து விடுகிறார். பாட்டி, தாய் ஆகியோரின் தாலாட்டு கேட்டு குழந்தைகள் தூங்கிய காலம் எல்லாம் மலையேறிக் கொண்டிருக்கிறது. இப்போது எஸ்.பி.பி., சித்ரா, சுஜாதா ஆகியோர் தான் பல்வேற வீட்டுக் குழந்தைகளுக்கு தாயாக மாறி டிவிடி மூலம் தாலாட்டு பாடி தூங்க வைக்கின்றனர்.
அதிலும் சில குழந்தைகளுக்கு குத்துப் பாட்டு கேட்டால் தான் தூக்கம் வருகிறது. எனவே தனுஷ், விஜய், அஜித்தின் குத்துப்பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாத்து நட பாட்டு, வேலை செய்ய பாட்டு, நடந்து போக பாட்டு, தூங்க பாட்டு என்று எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் வழக்கம் உள்ள தமிழகத்தில் அந்த வழக்கமெல்லாம் மாறிக்கொண்டிருப்பது வருத்தமான விஷயம்தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் வளர்கிறேனே மம்மி
» பாட்டுப் பட்டாசு
» பாட்டுப் பாடவா?
» என்னை தாலாட்ட வருவாளோ… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» நிற்க நேரமில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum