தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கன்னியரை காக்கும் சப்தகன்னியர்

Go down

கன்னியரை காக்கும் சப்தகன்னியர் Empty கன்னியரை காக்கும் சப்தகன்னியர்

Post  amma Sun Jan 13, 2013 2:15 pm

திருச்சி மாவட்டம் பந்த நல்லூர் மணல்மேடு பேருந்துத் தடத்தில், பந்த நல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் என்பது இங்குள்ள ஆலயத்தின் பெயர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில். உள்ளே நுழைந்தவுடன் விசாலமான மகா மண்டபம்.

நடுவே பலிபீடமும் நந்தியும் இருக்க, அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இடதுபுறம் பிள்ளையார் சந்நிதி உள்ளது; வலது புறம் முருகன் திருமேனி காட்சியளிக்கின்றது. அடுத்து உள்ள கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் சப்த மாதர்கள் ஏழு பேரும் வரிசையாக அமர்ந்து தரிசனம் தரும் காட்சி, நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

தேவகோட்டத்தின் தென்புறம் துர்க்கையம்மன் அருள் பாலிக்கிறாள். சுமார் 150 வருடங்களுக்கு முன் இந்த ஊர் விவசாயி, தனது வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது அவரது ஏர் முனை, எதன் மீதோ மோதித் தயங்கி நின்றது. அவர் உடனே என்ன தடை என்று அறிந்து கொள்ள அந்த இடத்தைத் தோண்டினார்.

தடை செய்த பொருளைப் பார்த்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! அவர் தோண்டிய இடத்தில் ஒரு அம்மன் சிலை இருக்கவே அதை வெளியே எடுத்தார். அவர் மனதில் ஓர் அருட் சலனம்! "ஒரு சிலைதானாப இன்னும் வேறு சிலைகள் இருந்தாலும் இருக்கலாமே!' என்று நினைத்தார். அந்த இடத்தையும், அதைச் சுற்றியும் மேலும் தோண்டத் தொடங்கினர்.

மொத்தம் ஏழு சிலைகள், வெளித் தோன்றின. அந்தச் சிலைகள், "சப்த மாதர்கள்' என விவரமறிந்த பெரியோர்கள் கண்டறிந்தனர். முதலில் ஓர் கீற்றுக் கொட்டகையில் சப்த மாதர்களின் வழிபாடு துவங்கியது. சில ஆண்டுகளுக்குப் பின், ஓர் ஆலயம் கட்டி தேவியரை பிரதிஷ்டை செய்தனர்.

அந்த ஆலயமே அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி ஆலயம். இங்கே சித்ரா பவுர்ணமி தொடங்கி 10 நாட்களுக்கு மிகச் சிறப்பாகத் திருவிழா நடைபெறும். முதல் நாள் காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் உற்சவம் குதூகலமாய் தொடங்கும். பத்து நாட்களும் உற்சவ அம்மன் வீதியுலா வருவதுண்டு.

பத்தாம் நாள் கரகம், காவடி, அலகு காவடி, தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் சுமந்து வருதல் என பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதும். அன்று கருவறை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று மாலை பூக்குழி இறங்குதல் என அழைக்கப்படும் தீ மிதி உற்சவம் மிகச் சிறப்பாக அரங்கேறும்.

பல நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்வார்கள். மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம், கொடி இறங்குதல் என விழா நிறைவு பெறும். இதைத் தவிர, மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். ஆடி வெள்ளிகளில் விளக்கு பூஜைகளும், கார்த்திகை மாத கார்த்திகையில் சொக்கபனை உற்சவமும் நடைபெறுகின்றன.

நவராத்திரியின் 10 நாட்களும் இந்த ஆலயம் பக்தர்களின் கூட்டத்தில் நிரம்பி நிற்கும். மாசி மகத்தன்று பக்தர்களும் பக்தைகளும் தீச்சட்டிகளை ஏந்தியும், கரகம் சுமந்தும் வழிபடுவர். இங்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இங்கு அருள்பாலிக்கும் சப்தமாதர்களிடம் வேண்டிக்கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு விரைந்து திருமணம் நடக்கின்றது. மேலும் அப்பெண்களைக் காத்து அருள்புரிவதும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை வரம் தருவதும் சப்த மாதர்களின் தனிக் கருணை எனலாம். உண்மையான பக்தியுடன் நாம் இறைவனை வழிபட்டால், நமக்குத் துன்பம் வரும்போது இறைவனே நம்மைத் தேடி வந்து அருள்புரிவார்.

ஆம்! இந்த உண்மையை உலகுக்கு உணர்த்திய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு நடனபுரீஸ்வரர் ஆலயமும் இந்த ஊரில்தான் உள்ளது. போகும் வழியில் இந்த ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்குச் செல்லலாம். இதனால் தேவியரின் திருவருளும் கிட்டும்! மகாதேவரின் பேரருளும் கிடைக்கப் பெறும்!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum