இருதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள்
Page 1 of 1

உணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உண்ணும் உணவும்தான். என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து பாதி, உணவு பாதி, இரண்டும் சேர்த்துத்தான் நோயைக் குணமாக்கும். பரவலாகக் காணப்படும் நோய்களில் இருதய நோயும் ஒன்று.
நோய் வருமுன் நம் ஆரோக்கியத்தைக் காக்க ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை. இருந்தாலும் நோய் வந்த பிறகும் மனம் நொந்துவிடாமல் உணவு வகைகளால் நோய் முற்றி விடாமல் நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். `விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்'.
இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதய நோயாளிகளுக்கான உணவு (1500 கலோரிகள்) உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு கொழுப்பு - 15 கிராம் வரை
சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு அதிகாலை ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது டீ ஒரு கப்.
காலை உணவு: இரண்டு இட்லிகள் சாம்பாருடன் அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி.
இடைப்பட்ட நேரம்: மோர் அல்லது காய்கறி சூப் அல்லது ஜூஸ்.
மதிய உணவு: நன்றாகக் குழைந்த சாதம், சாம்பார் அல்லது பருப்புடன். காய்கறி இரண்டு வகைகள், தயிர் அல்லது மோர், ஜெல்லி கலந்த பழ சாலட் அல்லது ஏதாவது ஒரு பழம்.
மாலை: அதிக நீர் கலந்த டீ அல்லது ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு.
இரவு சாப்பாடு: எண்ணெய் விடாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, மோர்.
படுக்கச் செல்லுமுன்: ஆடை எடுக்கப்பட்ட பால்.
அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு:
காலை:
ஆடை எடுக்கப்பட்ட பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளலாம்.
இடைப்பட்ட நேரம்:
கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது கோழி சூப் அருந்தலாம்.
மதியம்:
உணவுடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இருதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள்
» சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை
» சர்க்கரை நோயும், உணவுப் பழக்க முறையும்
» இருதய நோயாளிகள் ஆரோக்கிய உணவை மறக்கக்கூடாது
» கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum