மருத்துவர்களின் மருந்துப் பரிந்துரைகளை தணிக்கை செய்யவேண்டும்!
Page 1 of 1

முந்தையது|அடுத்தது
பன்னாட்டு, உள்நாடு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் இணங்கி மருத்துவர்களில் பலர் நோயாளிகளுக்கு தேவையில்லாத மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர் என்ற குற்றசாற்று கொஞ்ச நாட்களாக உரத்த குரலில் கேட்கத் தொடங்கியுள்ளது.
இதனால் சாதாரண காய்ச்சல் முதல் உக்கிரமான நோய்கள் வரை நோயாளிக்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
அதுவும் குறிப்பாக நிலையாக சில மாத்திரைகளையும் மருந்துகளையும் வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. இது பல வேளைகளில் அறிவுக்குகந்ததாக இருப்பதில்லை.
தேவையில்லாத முக்கியமற்ற வைட்டமின்கள், டானிக்குகள், இருமல் மருந்துகள் ஆகியவையே இந்தியச் சந்தைகளில் அதிகம் விற்கும் மருந்து மாத்திரைகளாக உள்ளன. பெரிய நிறுவனங்களின் லாபத்தை இவையே தீர்மானிக்கின்றன.
இந்தியச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும் ஒரு மருந்து எது தெரியுமா? பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இருமல் மருந்துதான் அது! சுமார் ரூ.200 கோடிக்கு ஆண்டொன்றுக்கு இந்த இருமல் மருந்து விற்றுத் தீர்க்கப்படுகிறது.
மருத்துவர்கள் இதுபோன்ற தேவையற்ற மருந்துகளை மேலதிகமாக பரிந்துரை செய்வதால் எந்த வித சிகிச்சை மதிப்பும் இல்லாத சொத்தை மருந்துகள் கூட இந்தியாவில் அதிகம் விற்று கொழுக்கின்றன!
அதேபோல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவை அடங்கிய மருந்துகளை பரிந்துரை செய்வது அதிகமாகியுள்ளது. பொறுப்பற்ற முறையில் கூட இந்த மருந்துப் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன என்பது 2010ஆம் ஆண்டே டெல்லியில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.
மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை தணிக்கை செய்ய தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருத்துவர்களின் மருந்துப் பரிந்துரைகளை தணிக்கை செய்யவேண்டும்!
» காது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.?
» கர்ப்பிணிகளுக்கு என்னென்ன அவசியம்?: மருத்துவர்களின் ஆலோசனைகள்
» ஏன் ஸ்கேன் செய்யவேண்டும்?
» சூரிய நமஸ்காரம் எப்பொழுது செய்யவேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum