ரொம்ப போர் அடிக்கும் போது என்னலாம் பண்ணலாம்!!!
Page 1 of 1
ரொம்ப போர் அடிக்கும் போது என்னலாம் பண்ணலாம்!!!
நிறைய நேரம் போர் அடிப்பது போலவே தோன்றும். அப்படி போர் அடித்தால், பெரும்பாலும் தூங்கத் தான் செய்வார்கள். ஆனால் அவ்வாறு எப்போது பார்த்தாலும் போர் அடிக்கும் போது தூங்குவதை தவிர்த்து, வேறு ஏதாவது ஒரு காரியத்தில் சிந்தனையை செலுத்தலாம். மேலும் போர் எதற்கு அடிக்கிறது என்று தெரியுமா? ஏதேனும் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்து, அதில் முழு கவனத்தையும் செலுத்துவதால், மனம் சோர்வடைந்து போர் அடிக்க ஆரம்பிக்கிறது. ஆகவே அந்த நேரத்தில் என்ன செய்தால், உற்சாகம் வரும் என்பதை படித்து தெரிந்துகொண்டு, செய்து பாருங்களேன்...
Bore
* எப்போது போர் அடித்தாலும் சாப்பிட்டு தூங்குவது என்று மட்டும் இருப்பார்கள். ஆனால் அவ்வாறு போர் அடிக்கும் போது செய்வதால் என்ன பயன். ஆகவே அப்போது வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து, சற்று வெளியே சென்று பிடித்த ஏதேனும் ஒரு ஐட்டமான சிக்கன் ரைஸ் அல்லது ஐஸ் கிரீம் என்று சாப்பிட்டு வந்தால், போர் அடிக்காது. மனமும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.
* எங்கேயாவது பிடித்த இடத்திற்கு போவதைப் பற்றி ப்ளான் போடலாம். ஏனெனில் அவ்வாறு அநத் நேரத்தில் போட்டால், மனம் சந்தோஷத்தோடு இருக்கும். போர் அடிப்பதும் போய்விடும்.
* மொபைலில் இருக்கும் ஏதேனும் ஒரு நம்பரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மெசேஜ், மிஸ்டு கால் அல்லது போன் செய்து சிறிது நேரம் விளையாடலாம். அதிலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது சற்று அவர்களை வம்புக்கு இழுப்பது போல் அனுப்பு வரலாம். அது சற்று விளையாட்டுத்தனமாக தான இருக்கும். இருப்பினும் இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.
* போர் அடிக்கும் போது, நண்பர்கள் தமக்கு எழுதிய டைரிகள் அல்லது நோட் புத்தகங்களை எடுத்து படித்துப் பார்க்கலாம். இதனால் பழைய கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்களுடன் செய்த அட்டகாசங்கள் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்து, போர் அடிப்பது போய்விடும்.
* வீட்டில் ஏதேனும் விருந்து அல்லது திருமணத்தின் போது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்க்கலாம். ஏனெனில் இதை நாம் வேலையாக இருக்கும் போது பொறுமையாக பார்க்க முடியாது. ஆனால் போர் அடிக்கும் போது, இதைச் செய்தால், குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சென்று வந்த ட்ரிப் ஞாபகத்திற்கு வந்து, இனிமையாகவும், மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
* வீட்டை எப்போது தான் சுத்தம் செய்வோமோ தெரியாது. ஆனால் அதை போர் அடிக்கும் போது செய்தால், நிச்சயம் மற்ற நேரத்தில் செய்யும் சுத்தத்தை விட, இந்த நேரத்தில் மிகவும் சுத்தமாக செய்வோம். மேலும் வீட்டை சுத்தம் செய்வதால், உடலுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும்.
* இல்லையெனில் அப்போது தனக்கு பிடித்த விளையாட்டை விளையாடலாம் அல்லது ஏதேனும் ஒரு பாட்டை போட்டு டான்ஸ் ஆடலாம். வேண்டுமென்றால் பிடித்த படங்களைப் பார்க்கலாம். கார் அல்லது பைக் ரைடிங் போகலாம்.
மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கண்டிப்பாக போர் அடிப்பது போய்விடும். அந்த நேரமும் ஒரு பயனுள்ளதாக இருக்கும். என்ன நண்பர்களே! நீங்க போர் அடிச்சா என்ன செய்வீங்க...
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» உங்கள் காதலர் ரொம்ப கோபப்படுறாரா? ஈஸியா டீல் பண்ணலாம்...
» பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!
» பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!
» இசை - இறங்கி அடிக்கும் சூர்யா
» உங்கள் காதலர் ரொம்ப கோபப்படுறாரா? ஈஸியா டீல் பண்ணலாம்...
» பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!
» பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!
» இசை - இறங்கி அடிக்கும் சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum