கவலை போக்கும் தீபம்
Page 1 of 1
கவலை போக்கும் தீபம்
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும்.
பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீப வழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணை விட்டு, பூட்டு போட்ட, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.
வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு மாதம் அமாவாசை மற்றும் பவுர்ணமியில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்தால் கீழ்கண்டபடி பலன்கள் கிடைக்கும்.
சித்திரை- தான்யம் உண்டாகும்
வைகாசி- செல்வம் கிடைக்கும்
ஆனி- விவாகம் நடக்கும்
ஆடி- ஆயுள் விருத்தி
ஆவணி-புத்திரபேறு உண்டாகும்
புரட்டாசி-பசுக்கள் விருத்தி
ஐப்பசி- பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை-நற்கதி உண்டாகும்
மார்கழி-ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
தை-வாழ்வில் வெற்றி கிடைக்கும்
மாசி-துன்பம் அகலும்
பங்குனி-தர்மசிந்தனை பெருகும்
சுபகாரியங்களில் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்து விளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கு மும்மூர்த்திகளின் வடிவம்.
குத்து விளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கவலை போக்கும் தீபம்
» கவலை போக்கும் தீபம்
» கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்
» கவலை போக்கும் ஈச்சனாரி விநாயகர்
» கவலை போக்கும் ஈச்சனாரி விநாயகர்
» கவலை போக்கும் தீபம்
» கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்
» கவலை போக்கும் ஈச்சனாரி விநாயகர்
» கவலை போக்கும் ஈச்சனாரி விநாயகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum