பெண்களின் ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்!!!
Page 1 of 1

Hormonal Problems
தற்போதைய காலத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் ஹார்மோன் பிரச்சனை. ஏனெனில் அதிக வேலைச் சுமை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற லைப் ஸ்டைல் போன்றவற்றால் உடலில் சுரக்கும் ஹார்மோனின் அளவு சரியாக சுரக்காமல், உடலில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஹார்மோனானது சரியான அளவு சுரக்காததால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் மாதவிடாயின் போதும் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை போக்க ஒரு சில உணவுகளை சரியாக உண்டாலே போதுமானது. அது என்னென்ன உணவுகள் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்...
1. மாதவிடாயின் போது வலிகள் மற்றும் சுளுக்குகள் அடிக்கடி ஏற்படும். அதற்கு காரணம் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருப்பது. ஆகவே கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை உட்கொண்டால் வலி ஏற்படுவது பாதியாக குறையும். அதிலும் பால், தயிர் மற்றும் வெண்ணெயில் கால்சியம் அதிகமாக இருக்கும்.
2. சிலருக்கு அதிக இரத்தப்போக்கு திடீரென ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே அப்போது இரும்புச் சத்து அதிகமாக உள்ள உணவான சிவப்பு அரிசி, சிக்கன், முட்டை மற்றும் கீரைகளை அதிகமாக உண்டு வந்தால் அதிக இரத்தப் போக்கானது சரியாகிவிடும்.
3. பெண்களுக்கு மாதவிடாயானது முடியும் போதோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் போதோ, மிகவும் சோர்ந்து, உடலானது மிகுந்த வெப்பத்துடன் இருப்பது போல் இருக்கும். அவ்வாறெல்லாம் இல்லாமல் இருக்க, நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள், மாதுளை போன்றவற்றை உண்டால் உடலில் இரத்த சுத்திகரிப்பானது சரியாக நடக்கும்.
4. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் மாதவிடாயினால் ஏற்படும் மனஅழுத்தத்தினால், மூளையானது அதிகமாக உற்பத்தி செய்யும் செரோடோனின் என்ற ஹார்மோனானது பலவீனமடையும். ஆகவே அதனால் உடலில் அதிகமான சோர்வு ஏற்படும். அப்போது உருளைக்கிழங்கை சாப்பிட்டால் அதில் உள்ள டிரிப்தோபன், செரோடோனின் என்ற ஹார்மோனை சரிசெய்யும்.
5. மேலும் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். மேலும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இதனால் உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவும்.
இத்தகைய உணவுகளை சரியாக உண்டு வந்தால், உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனையை சரி செய்வதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் இளமை உணவுகள்
» தொண்டைப் புண்ணை சரிசெய்யும் 9 உணவுகள்!!!
» மாதவிடாய் பிரச்சனையை சீராக்கும் உணவுகள்
» மாதவிடாய் பிரச்சனையை தவிர்க்கும் உணவுகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum