தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வத்தை அள்ளித்தரும் சொர்ண பைரவர்

Go down

செல்வத்தை அள்ளித்தரும் சொர்ண பைரவர் Empty செல்வத்தை அள்ளித்தரும் சொர்ண பைரவர்

Post  amma Sun Jan 13, 2013 1:33 pm

பொதுவாக பைரவர் திகம்பர வடிவினராகக் காணப்பட்ட போதிலும், தன்னை முழு மனதுடன் வணங்கும் பக்தர்களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார். அதாவது பொன்னை இழுத்து தருபவர் என்னும் பொருள்படி இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று அழைக்கப்பட்டார்.

சுவர்ணாகர்ஷண பைரவர் பொன் நிறம் கொண்டவர் என்றும் மஞ்சள் நிறப் பீதாம்பர ஆடைகளை அணிந்தவர் என்றும் மூன்று கண்ணும், நான்கு கரங்களும் கொண்டவர் என்றும் மாணிக்க மணிகள் இழைத்த பொன்னாலான அட்சய பாத்திரம் ஏந்தியவர், இரும்பு, ஓரி, சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றை தரித்தவர் என்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவர் என்றும், எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைப்பவர் என்றும் சகல சித்திகளையும் அருள்பவர் என்றும் ஸ்ரீ தத்துவ நீதி என்னும் நூலில் அறிமுகப்படுத்தப்படுகிறன்றார்.

இவரது மடி மீது அமர்ந்திருப்பவள் சொர்ண பைரவியாள். பொன்னிறமாக பிரகாசிக்கும் அவள் சகல அணிமணிகளை பூண்டவளாகவும் பொன் கொட்டும் குடம், தாமரை, அபய முத்திரை தரித்தவளாகவும் பைரவரை தழுவிக்கொண்டு இடது பாகத்தில் வீற்றிருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

முற்காலத்தில் அரசர்களின் பண்டாரங்களில்(பொக்கிஷ சாலைகளில்) சுவர்ண ஆகர்ஷண பைரவரை நிறுவி சிறப்பு பூசைகள் செய்து வழிபட்டனர். அதனால் பொக்கிஷ சாலையில் பொன் குவிந்து கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

சொர்ண பைரவர் வடிவம்.........

நீண்ட பத்ர பீடத்தில் அம்பிகையுடன் அமர்ந்த நிலையில் காணப்படும் பைரவரின் பின் கரங்களில் தாமரை, சங்கு ஆகியவையும் முன் கரங்களில் அபய வரத முத்திரைகளும் காணப்படும்.இந்த பைரவரின் வலத் தொடையில் பூர்ண கும்பம் காணப்டும். அம்பிகையின் இடக்கரத்தில் சொர்ண பொற்குடமும், வலக்கரம் சிவனாரின் இடுப்பை தழுவிய நிலையில் காணப்படும் என்று காஸ்யப சிற்ப நூலில் சொர்ண பைரவரின் வடிவம் குறிப்பிடப்படுகிறது.

இந்த சொர்ண பைரவரை சுவர்ணாகர்ஷண பைரவர் என்ற பெயரில் ஆகம நூல் சிற்சில மாறுபாடுகளுடன் அறிமுகப்படுத்து கின்றது. ஸ்ரீ மகாலட்சுமி மந்திர கோசத்தில் சுவர்ண பைரவரின் நான்கு கரங்களில் பொற்குடம், அபயம், தாமரை, வரதம் ஆகியன விளங்கும் என்று ஒரு வடிவமும், அவரின் நான்கு கரங்களில் துடி, தீயழல், சூலம், வரம் ஆகியன விளங்கும் என்று மற்றொரு வடிவமும் சுவர்ண பைரவரின் நான்கு கரங்களிலும் பாசம், அபயம், அங்கும், வரம் ஆகியன அமைந்திருக்கும் என்று இன்னொரு வடிவம் சூர்க்கத்தி, கபாலம், வரதம் ஆகியன விளங்கும் என்று மற்றொரு வடிவமும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஆறு கரங்களையுடைய சுவர்ணாகர்ஷண பைரவரின் திருக்கரங்களில் முறையே தாமரை, சங்கம், அபயம், அமுத கும்பம், அணைத்த கரம், வரம் ஆகியனவாக அமையும் என்றும் சுவர்ண பைரவரின் வடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன.

மஞ்சள் மேனியர், நாற்கரத் தோளர், முக்கண்ணர், மஞ்சள் ஆடை அணிந்தவர், மாணிக்கமணிகள் இழைத்த பொன் அட்சயப் பாத்திரமேந்தியவர், இரும்பு வாள், பெருஞ்சூலம், தோமரம், சாமரம் இவைகளைத் தாங்கியவர். பெருங்களிப்புக் கொண்டவர், உண்மை மகிழ்வில் திளைப்பவர், அனைத்துத் தேவர்களாலும் வணங்கப்பட்டவர். சர்வ சித்தி தருபவர் என்று ஸ்ரீ தத்வ நிதி என்ற நூல் சுவர்ணகர்ஷணா பைரவரை அறிமுகப்படுத்துகிறது.

கரண்ட மகுடன் தாங்கி விரிசடையினராய் வலக்கரங்களில் சூலமும் பொற்குவியலும் ஏந்தி இரக்கமிரண்டிலும் அக்கமாலையும் கதையும் ஏந்தி பொன்னாபரணம் அணிந்த மேனியராய் கீழே பாத்திரங்களில் பொன் நிதியங்கள் குவிந்த நிலையில் சுற்றிலும் நாய்கள் அமர்ந்திருக்கும் வித்தியாசமான சுவர்ணாகர்ஷண பைரவரை `மந்த்ர மஹார்ணவம்' அறிமுகப்படுத்துகின்றது.

இப்படி வித்தியாசமான வடிவங்களில் காணப்படும் சுவர்ண பைரவர் சிவபெருமானின் 64 மூர்த்தங்களிலும் வேறுபட்டவர். அச்சமூட்டும் வடிவமாகவும், காக்கும் கடவுளாகவும், கண்டகால பைரவரின் வடிவம் வேறு, சாந்தம் தவமும் முகத்தினராய் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாய் காணும் சுவர்ண பைரவரின் வடிவம் வேறு.இந்த சொர்ண பைரவரின் ரிஷிமூலம் சிதம்பரம் என்று தெரிகிறது.

பொன்னம்பலப் பெருமானாம் ஸ்ரீ நடராஜ மூர்த்தமே சொர்ண பைரவரின் வடிவம். திருவண்ணாமலையில் சிவலோகியாக இருந்த நமச்சிவாயருக்கு உதவியவர்களுக்கு எல்லாம் சொர்ண பைரவர் உதவினார். நமச்சிவாயருக்கு தானம் கொடுத்த எல்லோருக்கும் ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பொன்னும் பொருளும் சொர்ண பைரவர் அருளால் பெருகிக் கொண்டே இருந்தன.

அவர்கள் வீட்டில் பொன்னம்பலம் அருளால் பொன்மாரிப் பொழிந்தது. இப்படி பொன்தானம் கொடுத்த பக்தர்களுக்கு அம்பலவர் சர்வ நிதியங்களுடன் ஸ்ரீ சொர்ண பைரவராகக் காட்சியளித்ததுடன், அவர்களுக்கு சகல செல்வங்களையும் கொடுத்துத் கொண்டே இருந்தார். ஸ்ரீசொர்ண பைரவர் அருளால் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்ற பொருளைக் கொண்டு நமச்சிவாயரும் பல அறக்கட்டளைகளையும், திருப்பணிகளும் செய்து தில்லையில் சைவம் தழைக்கப் பாடுபட்டார்.

குருநமச்சிவாயருக்கும், தீட்சிதர்களுக்கும் தரிசனம் தந்த ஸ்ரீ சொர்ண பைரவரின் திருவடிவம் தில்லை பொன்னம்பலத்தில் சிற்சபையில் கீழ்ப்புறத்தில் இருக்கிறது. ஆகாயத் தலமான இந்த சிற்றம்பலத்தில் சொர்ண பைரவராக இறைவன் காட்சியளித்ததால் இம்மூர்த்தி `ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர்' என்று போற்றப்படுகிறார்.

திருவிழாக் காலங்களில் இந்த சொர்ணாகர்ஷண பைரவரைக் கனகசபையில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது. ஸ்ரீ சொர்ண பைரவருடைய வழிபாட்டில் சொர்ண லாபமும் பயம் நீங்கியும், சர்வ அட்ட சித்தியும் ஏற்படும் என பெரியோர் கூறுவர். பொன்னும் மணியும் குவியும் திருப்பதி திருமலையில் திருமலையானிடத்தில் இருக்கும் சக்கரம் சொர்ணாகர்ஷண சக்கரம் என்பதால் தான் பொன்னும் பொருளும் குவியும் திருப்பதியாக இது விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

ரசவாத சித்தியில் வல்லவரான கொங்கண முனிவர் மூலிகைச் சாற்றினை எந்த பொருள் மீது தடவினாலும் அப்பொருள் தங்கமாக மாறும் சித்தியை அடைய இலுப்பைக்குடி பைரவரை வணங்கினார். மனத்தினை ஒருமுகப்படுத்தி சொர்ண பைரவராகிய என்னை வணங்கினாலே போதும், வேறு மூலிகைப் பிரயோகங்கள் ஏதும் தேவையில்லை என்று கூறி மறைந்தார். சொர்ண பைரவரை வழிபட்ட கொங்கண முனிவர் ஜீவ சமாதி திருப்பதியில் உள்ளது.

எனவே தான் திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்குத் தங்கத்தைக் கொட்டுகிறார்கள். அப்படித் தங்கமாகக் கொட்ட முடியாதவர்கள் பணக்கட்டுகளாகக் கொட்டுகின்றனர். இப்படி தமது சீடரான கொங்கணவரின் ஜீவ சமாதியில் செல்வம் கொட்டப்படுவதால் சொர்ண பைரவரும் மகிழ்ச்சி அடைந்து அப்படி காணிக்கை செலுத்தியவர்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக செல்வங்களை வாரி வழங்குகின்றார்.

முற்காலத்தில் தில்லை தீட்சிதரர்கள் தம் ஜீவிதத்திற்காக எவரிடமும் பொன்னோ பொருளே பெற்றதில்லை தினசரி அர்த்தசாம பூசை நிறைவு பெற்றவுடன் செப்பினால் செய்த தாமரை மலர் ஒன்றை பொன்னம்பலத்தில் உள்ள பைரவரின் உற்சவ மூர்த்தியின் பாதத்தில் வைத்து விடுவார்களாம். மறுநாள் பைரவரைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வார்களாம். அது அவர்களுடைய பணிக்கேற்ப பொன்னாக மாறியிருக்குமாம்.

அவர்கள் அதனை விற்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனராம். இதிலும் செப்பினால் செய்த தாமரை மலர் எனபதற்குப் பதிலாக பைரவ மூர்த்தியினுடைய பாதத்தில் செப்புத் தகட்டை இரவில் அர்த்தசாம பூசை சமயத்தில் சார்த்தி காலையில் பைரவரின் அருளால் தங்கமாக மாறியிருக்கும். அதனைப் பெற்று ஜீவிதம் செய்தார்கள் என்றும் கூறுவதுண்டு.

நடராசர் சன்னதியின் கீழ்ப்புறத்தில் அமைந்துள்ள உற்சவமூர்த்தியான இந்த சொர்ண பைரவருக்கு நாள்தோறும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேக காலங்களிலும், விசேஷ தினங்களிலும் பக்தர்களின் வேண்டுதலுக்காக பொற்சபையில் இம்மூர்த்தியை எழுந்தருளச் செய்து விசேஷ அபிஷேகங்கள் நடத்தி நெய்யினால் சுடப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து உபசாரம் செய்கின்றனர்.

இவரை வழிபடுவதால் சுவர்ண லாபமும், பயமின்மையும், சர்வ கலைகளும் சித்தியாகும் என்று கூறப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் கோயிலில் பணிபுரிந்த தீட்சிதர்கள் வில்வ இலைகளைப் பறித்து நடராசர் சன்னதியில் இருக்கும் சொர்ண பைரவரின் பாதங்களின் அடியில் வைத்து இரவுப் பூசை செய்வார்கள். மறுநாள் காலையில் அந்த வில்வ இலைகளெல்லாம் தங்க இலைகளாக மாறியிருக்குமாம்.

தீட்சிதர்கள் அதனைத் தங்களது அன்றாடத் தேவைகளுக்கும், கோயில் செலவுகளுக்கும் பயன்படுத்தினார்களாம். இந்த செயல் வேறு எங்கும் நடந்ததில்லை என்றும், சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர்கள் இச்செய்தியினை யாருக்கும் தெரியப்படுத்தாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்ததனால் இது `சிதம்பர இரகசியம்' என்று வழங்கப்பட்டது என்று செவிவழி செய்துயொன்று கூறப்படுகிறது.*
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum