நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சுவர்ணா அரிசி!
Page 1 of 1

Swarna Rice
இந்தியாவில் விளைவிக்கப்படும் அரிசியில் ஒன்றான சுவர்ணா, உடலில் ஏற்படும் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையம் (ஐஆர்ஆர்ஐ) தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வு நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமான கிளைசீமிக் இண்டெக்சை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகமாக அரிசி உணவை உண்பவருக்கு அதிகமாக நீரிழிவு ஏற்படுகின்றது. ஏனெனில் அரிசியில் கிளைசீமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கிறது. ஆகவே அவர்கள் அரிசியில் ஆய்வு செய்தனர். அதற்காக உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளையும் அரிசிகளின் மீது ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் மொத்தம் 235 அரிசிகளின் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்திய அரிசி வகையான சுவர்ணா, ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு உள்ளிட்ட அரிசி வகைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் இந்திய அரிசி வகையான சுவர்ணாவில் குறைவான கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கிறது என்றும், மற்ற ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு ஆகியவற்றில் சுவர்ணாவை விட அதிகமாகவும் கிளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த ஆய்வில், அதிகமான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், எளிதாக விரைவில் செரித்து, அதனை உடலானது ஒரேநேரத்தில் முற்றிலும உறிஞ்சி, இறுதியில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது. இதனாலேயே அரிசியை உண்பதால் நீரிழிவு ஏற்படுகின்றது என்றும், ஆனால் குறைவான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், செரிமானத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது மெதுவாக, தேவையான அளவு உடலில் ஏறும், ஆகவே அதனால் நீரிழிவு ஏற்படுவது கட்டுப்படும் என்றும் கூறுகின்றனர். மேலும் உலகளவில் சாப்பிடுவதற்கு சத்தான அரிசியாக இந்திய அரிசியான சுவர்ணாவையே அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள், அரிசி உணவை உண்ணாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. தினமும் அரிசி உணவானது உடலுக்கு கொஞ்சமாவது வேண்டும். ஆகவே அவர்கள் இந்த சுவர்ணா அரிசியை வாங்கி உண்டால், சர்க்கரை நோயானது கட்டுப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்.
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் துளசி மருத்துவக்குறிப்பு.
» டைப் 2 ரக நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியும் - பிரித்தானியா.
» நீரிழிவு சிறப்புப் பார்வை - இந்தியாவில் நீரிழிவு நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum