சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
Page 1 of 1
சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
தெரிஞ்சு கும்பிட்டாலும், தெரியாம கும்பிட்டாலும் சிவராத்திரி தினத்தன்று கடவுளை வணங்கினா பலன்கள் நிறைய கிடைக்கும்கறது நியதி. வணங்கவில்லை என்றாலும் கூட உண்மையா இருந்தா உயர்வு கிடைக்கும் என்கிறதை ஒரு கதை விளக்குது. குரங்காகவும், சுண்டெலியாகவும் பறந்து சிவராத்திரி அன்று சிறிய செயல்செய்து அதன் பலனாக மன்னர்களாகப் பிறந்தவர்கள் பற்றிய கதை அது.
ஒரு சிவராத்திரி அன்னைக்குச் சிவனும், பார்வதியும் ஒரு வில்வமரத்தடியில் அமர்ந்திருந்தபோது, மரத்தின்மேல் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. அந்தக்குரங்கு ஒவ்வொரு இலையாகப் பறித்து சிவன்மேல் போட்டுக்கிட்டே இருந்தது. நோக்கம் ஏதுமில்லாவிட்டாலும் கூட சிவராத்திரியன்று வில்வார்ச்சனை செய்த காரணத்தால் அந்தக் குரங்கை உலகாளும் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் ஈசன்.
அதேபோல சிவராத்திரியன்று ஒரு சிவன்கோவிலில் இருந்த விளக்கில் நெய் ஊற்றி தீபம் எரியத் தொடங்கியது. பூஜை முடிந்ததும் அந்தக் கோவிலின் அர்ச்சகர் வீட்டுக்குப் போய் விட்டார். நெய் ஊற்றி ஏற்றிய தீபம் மங்கத் தொடங்கியது. நெய் வாசத்தால் கவரப்பட்ட பெருச்சாளி ஒன்று சிதறிய நெய்யைச் சுவைக்கும்போது அதன் உடல்பட்டு திரி தூண்டி விடப்பட்டது.
சிவராத்திரியன்று தன்னையறியாமல் திரியைத் தூண்டி விளக்கின் ஒளி அதிகமாக வழி செய்ததால் அடுத்த பிறவியில் அந்த எலி மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சிவராத்திரியன்று தெரிஞ்சு செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் நிச்சயம் என்பதையே மேற்கண்ட கதைகள் நமக்குக் கூறுகின்றன. இந்தக் கதைகள் சிவ ரகசிய காண்டத்திலும் அருணாசல புராணத்திலும் இருக்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
» சிவனை எப்படி வணங்க வேண்டும்........
» சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
» சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
» பெற்றவர்கள் நம் தெய்வங்கள்
» சிவனை எப்படி வணங்க வேண்டும்........
» சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
» சிவனை வணங்கி பலன் பெற்றவர்கள்
» பெற்றவர்கள் நம் தெய்வங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum