ஃபேஷியல் செய்யப் போறீங்களா? இதை படிச்சுட்டு செய்யுங்க...
Page 1 of 1
ஃபேஷியல் செய்யப் போறீங்களா? இதை படிச்சுட்டு செய்யுங்க...
முகத்தை அழகு படுத்துவதற்கு ஒரு ஈஸியான வழி என்றால் அது ஃபேஷியல் செய்வது தான். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசிகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கிவிடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்றும் செய்யலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். அவ்வாறு ஃபேஷியல் செய்யும் போது, முதலில் சருமத்தின் மீது சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதிலும் ஃபேஷியல் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றதல்ல. ஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போமா!!!
Before & After Getting A Facial
ஃபேஷியல் செய்யும் முன்...
* எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ண வேண்டும். சருமம் ஃபேஷியல் செய்வதற்கு சரியாக உள்ளதா, இல்லையா என்று பார்க்க வேண்டும். அதிலும் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்யும் முன் அழகு நிபுணர்களை பரிசோதிக்க வேண்டும்.
* முகத்தில் பருக்கள் அல்லது பிம்பிள் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் கெட்டுவிடும். மேலும் பிம்பிள் முகம் முழுவதும் பரவி, அழகை கெடுத்துவிடும்.
* ஃபேஷியல் செய்யும் முன் வெயிலில் செல்லக் கூடாது. ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் பட்டால், ஃபேஷியல் செய்த பின்னர், அதன் விளைவு தெரிய வரும். ஆகவே ஃபேஷியல் செய்யப் போகும்முன் நீண்ட நேரம் வெயியில் செல்லாமல் இருப்பது நல்லது. சொல்லப்போனால் வெயில் படாதவாறு ஒரு வாரம் இருந்தால், நல்லது.
ஃபேஷியல் செய்த பின்னர்...
* ஃபேஷியல் செய்த பின்னர், முகத்தை விரல்களால் தேய்க்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு தேய்த்தால், ஃபேஷியல் செய்தால் சருமத்துளைகள் மறைவது தடுக்கப்படும். அதாவது, அவ்வாறு தேய்க்கும் போது, ஃபேஷியல் செய்து சருமத்துளைகள் ஃபேஷியலில் உள்ள பொருட்களை உறிஞ்சி மறைய ஆரம்பிப்பது தடுக்கப்படும்.
* ஃபேஷியல் முடிந்த பின்பு 2 மணிநேரத்திற்கு முகத்தை கழுவ கூடாது. வேண்டுமென்றால் முகம் எண்ணெய் பசையுடன் இருந்தால் மட்டும் தான் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தல், முகத்திற்கு ஆவி பிடித்தல் போன்றவற்றை செய்யக் கூடாது. ஏனெனில் ஃபேஷியல் செய்த பின்னர், சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். அந்த நேரத்தில் புருவத்தை வடிவமைத்தால், ஈஸியாக வந்துவிடும். ஆகவே அவற்றையெல்லாம் செய்யாமல், சருமத்தை சற்று ரிலாக்ஸ் ஆக விடுங்கள்.
* ஃபேஷியல் செய்தப் பின்னர், 2-4 மணிநேரத்திற்கு வெயிலுக்கு செல்ல வேண்டாம். இதனால் புறஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்துளைகளையும் பாதிப்படைய செய்யும், பின் ஃபேஷியல் செய்ததே வீணாகிவிடும்.
* 3-4 மணிநேரத்திற்கு எந்த ஒரு மேக் கப்பும் செய்யக் கூடாது. ஏனெனில் செயற்கைப் பொருட்கள் சருமத்தில் பட்டால், சருமத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக அரிப்பு, புண் போன்றவை ஏற்படும்.
* வேண்டுமென்றால் அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து, முகத்தை வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். அதற்காக முகத்திற்கு எலுமிச்சை சாற்றாலோ அல்லது மற்ற கெமிக்கல் கலந்த பொருட்களால் கழுவுவதை தவிர்க்க வேண்டும். இதனால் முகத்தில் அலர்ஜியான அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இரண்டு நாட்கள் கழித்து முகத்திற்கு வெள்ளரிக்காய் அல்லது தக்காளியை வைத்து ஃபேஷியல் செய்யலாம்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், ஃபேஷியல் செய்ததன் பலனை முற்றிலும் அடைவதோடு, முகம் நன்கு அழகாக, பளபளப்போடு மின்னும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டேட்டிங் போறீங்களா? இதை படிச்சுட்டு போங்க...
» நாய் வாங்க போறீங்களா? இதை படிச்சுட்டு போங்களேன்...
» ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?
» வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா..?
» வீட்டிற்கு வேலி போடலாம்ன்னு இருக்கீங்களா? இதை படிச்சுட்டு போடுங்க...
» நாய் வாங்க போறீங்களா? இதை படிச்சுட்டு போங்களேன்...
» ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?
» வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா..?
» வீட்டிற்கு வேலி போடலாம்ன்னு இருக்கீங்களா? இதை படிச்சுட்டு போடுங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum