அழகான முகத்திற்கு அரிசியை வெச்சு ஃபேஸ் ஸ்கரப் பண்ணுங்க...
Page 1 of 1
அழகான முகத்திற்கு அரிசியை வெச்சு ஃபேஸ் ஸ்கரப் பண்ணுங்க...
தானியங்களில் ஒன்றான அரிசி உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் பொருளின்றி, அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. எப்படியெனில் அரிசியை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்யலாம். இவ்வாறு ஸ்கரப் செய்வதால், சருமம் நன்கு மிருதுவாகவும், சருமத்துளைகள் நன்கு விரிவடைந்து அழுக்குகள் வெளியேறி சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். இப்போது அந்த அரிசியை வைத்து எப்படி ஸ்கரப் செய்வதென்று பார்ப்போமா!!!
5 Face Scrubs Using Rice
* அரிசி மற்றும் தேன்: தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இது சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தருவதோடு, சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பழுதடைந்த செல்களை புதுபிக்கவும் செய்யும். ஆகவே அதற்கு ஊற வைத்துள்ள அரிசி அரைத்து, பேஸ்ட் போல் செய்து, சிறிது தேன் கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். அதனால் முகப்பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கும்.
* அரிசி மாவு மற்றும் பேக்கிங் சோடா: அரிசி மாவு அல்லது ஊற வைத்து அரைத்த அரிசி மாவுடன், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்திற்கு தடவ வேண்டும். அதிலும் தடவி, நன்கு 1 நிமிடம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி அழகாகக் காணப்படும். அதிலும் இந்த முறையை எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் செய்வது நல்லது.
* தக்காளி மற்றும் அரிசி: அரிசியை தண்ணீரில் 10-20 நிமிடம் ஊற வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை நன்கு மசித்து, அரிசி மாவுடன் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும். ஏற்கனவே தக்காளி முகப்பரு மற்றும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சிறந்தது. ஆகவே இந்த ஸ்கரப் செய்யும் போது, மூக்கில் நன்கு தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் அகன்றுவிடும்.
* சர்க்கரை மற்றும் அரிசி: அழகுப் பொருட்களில் சர்க்கரை மிகவும் சிறந்தது. அத்தகைய சர்க்கரையை அரிசியுடன் சேர்த்து அரைத்து, பௌடர் போன்று செய்து, பின் அதோடு தயிரை கலந்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும். இதனால் சருமம் நன்கு ஈரப்பசையோடு, சுத்தமாகக் காணப்படும்.
* அரிசி, பால் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்: இது ஒரு சிறந்த மற்றொரு ஃபேஸ் ஸ்கரப். அதிலும இதனை 2 நிமிடங்களில் செய்யக்கூடிய வகையில் எளிதானது. அதாவது அரிசி மாவுடன், 2 துளிகள் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் 4-5 துளிகள் பாலை ஊற்றி கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 1-2 நிமிடம் ஸ்கரப் செய்து, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஆகவே மேற்கூறிய சில அரிசியாலான ஸ்கரப்களை வீட்டில் இருக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை செய்து, சருமத்தை நன்கு அழகாக பட்டுப் போன்று பராமரியுங்கள். முக்கியமாக ஸ்கரப் செய்யும் போது விரல்களை நீரில் நனைத்து பின் ஸ்கரப் செய்யுங்கள். அதிலும் மசாஜ் செய்யும் போது முன்னும், பின்னும் நன்கு சுழற்றி செய்ய வேண்டும். மேலும் ஃபேஸ் ஸ்கரப்களை தினமும் செய்யக்கூடாது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
» முகப்பருவை போக்க எப்ஸம் உப்பை வெச்சு ஸ்கரப் பண்ணுங்க!!!
» பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...
» முகம் எண்ணெய் பசையா இருக்கா? ஸ்கரப் பண்ணுங்க...
» புருவம் சீக்கிரம் வளர மாட்டீங்குதா? இதை வெச்சு ட்ரை பண்ணுங்க...
» முகப்பருவை போக்க எப்ஸம் உப்பை வெச்சு ஸ்கரப் பண்ணுங்க!!!
» பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...
» முகம் எண்ணெய் பசையா இருக்கா? ஸ்கரப் பண்ணுங்க...
» புருவம் சீக்கிரம் வளர மாட்டீங்குதா? இதை வெச்சு ட்ரை பண்ணுங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum