பருக்களால் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்?
Page 1 of 1
பருக்களால் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்?
அழகான முகத்தில் பருக்கள் வந்தால், அது எங்கு பெரிதாக மாறி, முக அழகை கெடுத்துவிடுமோ என்று பயந்து, அதனை ஒரே நாளில் போக்க கடைகளில் விற்கும் க்ரீம்கள் மற்றும் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் நிறைய மக்கள் அதனை போக்குவதற்கு இயற்கை பொருட்களான வீட்டு மருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.
எத்தனை பொருட்களை பயன்படுத்தினாலும், பருக்கள் போய்விடுமே தவிர அதனால் ஏற்படும் தழும்புகள் போவதில்லை. இவை முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க ஒரு சில ஈஸியான வழிகள் இருக்கின்றன.
How To Prevent Pimple Scars?
முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க...
* முகத்தில் பருக்கள் வந்தால், உடனே அவற்றை உடைக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை உடைத்தால், அவற்றிலிருந்து வரும் சீல், முகத்தில் பரவி நிறைய பருக்களை வர வைப்பதோடு, அவை பரு வந்த இடத்தில் தழும்புகளை ஏற்படுத்திவிடும்.
* நிறைய பேர் பருக்களை போக்க இயற்கை பொருளான கிராம்பை பேஸ்ட் செய்து தடவுவார்கள். இந்த முறை நல்ல பலனைத் தரும் தான், ஆனால் முகத்தில் தழும்புகளை ஏற்படுத்தும். ஆகவே அதனை பயன்படுத்துதை விட, சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி செய்தால், நல்லது.
* முகத்தில் பருக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படாமல் இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் மாசுக்கள் மற்றும அழுக்குகள் தான் முகத்தில் பருக்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்தால், உடனே முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* பருக்கள் முகத்தில் இருந்தால், வெயிலில் அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனிடமிருநது வெளிவரும் புறஊதாக் கதிர்கள், சரும செல்களை பாதிப்பதோடு, பருக்களை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தழும்பை ஏற்படுத்திவிடும்.
* பருக்களை குறைக்க சிறந்த ஃபேஸ் பேக் என்றால், அது ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் தான். ஆகவே பருக்கள் இருப்பவர்கள், முகத்திற்கு சந்தன ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனால் பருக்கள் குறைகிறதோ இல்லையோ, ஆனால் தழும்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மேற்கூறியவற்றை செய்து வந்தால், பருக்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்கலாம். மேலும் ஏற்கனவே பருக்கள் இருப்பவர்கள், ஆலிவ் ஆயில் அல்லது வெள்ளரிக்காயை வைத்து மசாஜ் செய்யலாம். வேண்டுமென்றால் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தாலும், பருக்கள் குறையும். பருக்களை குறைக்க ஒரு இயற்கைப் பொருள் என்றால் அது கற்றாழை. இந்த கற்றாழையை முகத்தில் தடவி, 1-2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 3-5 நாட்கள் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, எந்த ஒரு பருக்களும் இல்லாமல் காணப்படும்.
மேலே சொன்னவற்றை ட்ரை செய்து பார்த்திருக்கிறீர்களா? எப்படி இருந்ததென்ற உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிறப்பு தழும்புகளை நீக்கும் தக்காளி சாறு!
» பருக்களால் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்?
» தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி
» தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க சில டிப்ஸ்...
» உடலில் ஏற்பட்ட தழும்புகளை நீக்க சில வழிமுறைகள்
» பருக்களால் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்?
» தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி
» தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க சில டிப்ஸ்...
» உடலில் ஏற்பட்ட தழும்புகளை நீக்க சில வழிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum