தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்த முகத்திற்கு எந்த சடை அழகு

Go down

எந்த முகத்திற்கு எந்த சடை அழகு Empty எந்த முகத்திற்கு எந்த சடை அழகு

Post  ishwarya Thu Feb 07, 2013 5:31 pm

ஒவ்வொரு பெண்ணிற்கு ஒவ்வொரு வடிவ முகம். சிலருக்கு நீள முகம். சிலருக்கு உருண்டை முகம், சிலருக்கு இதய வடிவ முகம். ஒவ்வொருவரும் தங்களின் முக அமைப்பிற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் போடவேண்டும். அப்பொழுதுதான் அது பாந்தமாய் பொருந்தி வரும். எந்த முகத்திற்கு எந்தவகையான தலை அலங்காரம் ஏற்றது என்று ஆலோசனை கூறுகின்றனர் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்டுகள்.

முட்டை வடிவ முகம்

முட்டை வடிவமான முகம் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தலை குட்டையாக வெட்டினால் அழகான, அமைப்பான முக அழகு கிடைக்காது. ஓரளவு நீளமாக, அலையடிப்பது போன்ற ஸ்டெப்களுடன் கூடியவால்யூம் லேயர்ஸ்' கட்டிங் செய்யவேண்டும்.

இந்த வகை ஹேர் கட் உங்கள் முகத்தின் இருபுறமும் கத்தையாக விழுந்து, ஒடுங்கிய முகத்தை அகலமாக, அழகாக தோன்றச் செய்யும். இந்த கூந்தல் அலங்கார முறையை சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் மங்கையர் விரும்புகின்றனர். ஓவல் முக அமைப்பு கொண்டவர்களுக்காக 25 க்கும் மேற்பட்ட ஹேர் ஸ்டைல் முறைகள் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது.

நீளமான முகம்

நீளமான முகத்தைக் கொண்டவர்கள் குட்டையாக முடி வெட்டலாம். நீளமாக முடி இருந்தால் அதை சுருட்டி அலை அலையாய் சின்னதாக்கலாம். இதனால் முகம் சின்னதாக தெரியும்.

இதயவடிவ முகம்

இதய வடிவ முகம் அரிதாக இருக்கும். இவர்கள் சைடில் கட் செய்து விடலாம். லேயர் லேயராக கட் செய்தால் முகத்திற்கு அம்சமாக இருக்கும். முகமும் வடிவமாய் இருக்கும்.

சதுர வடிவ முகம்

சதுர முகமும் நீள கூந்தலும் கொண்டவர்கள் தங்கள் முகத்திற்கு ஏற்ப ப்ளாட் கட்டிங் செய்து கொள்ளலாம். சைடில் கொஞ்சம் வெட்டி விட்டால் அம்சமாக இருக்கும். முக வடிவம் சற்று மாறுதலாகும்.

உருண்டை முகம்

பெரும்பாலானவர்களுக்கு உருண்டை வடிவ முகம் இருக்கும். இவர்களுக்கு நீளமாக, ஸ்ட்ரெயிட் கூந்தல் அலங்காரம் அழகாய் பொருந்தும். நடு முதுகு வரை வெட்டி கொஞ்சம் சுருட்டி விட்டாலும் பொருத்தம்தான்.

ரிசப்சன், பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும் போது உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப அசத்தலாய் ஹேர் ஸ்டைல் செய்து போங்களேன். அனைவரின் கண்களும் உங்கள் மீதுதான் இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum