கருமையான கூந்தலை பெறுவதற்கு வீட்டிலேயே எண்ணெய் இருக்கு!!!
Page 1 of 1

இன்றைய காலகட்டத்தில் கருமையாக இருக்கும் கூந்தலானது விரைவில் நிறத்தை இழந்து, இளநரையாகிறது. அவ்வாறு கூந்தல் கருமை நிறத்தை இழப்பதற்கு, கூந்தலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காததே ஆகும். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு முறையான கூந்தல் பராமரிப்பும் இல்லாததாகும். அழகாக இருக்க, எவ்வாறு முகத்திற்கு அத்தனை மேக்கப் செய்கிறோம். அந்த அழகு முகத்தில் மட்டும் காணப்படுவதில்லை, கூந்தலிலும் தான் இருக்கிறது. அத்தகைய கூந்தல் நன்கு கருமையாக வளர்வதற்கு எங்கும் செல்ல வேண்டாம், அதற்கு மருந்தான எண்ணெய் வீட்டிலேயே இருக்கிறது. அத்தகைய எண்ணெயை எப்படி செய்து, பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!!
* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
* ஒரு பௌலில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.
* இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.
* செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.
மேலே சொன்ன அனைத்து எண்ணெய்களையும் இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்த வேண்டும். அதிலும் இந்த எண்ணெய்களை தடவிய பின், வெளியே செல்ல வேண்டுமென்றால், குளிர்ந்த நீரில் அலசியப் பின்னரே செல்ல வேண்டும். அதனால் கூந்தலானது கருமையாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தலை வீட்டிலேயே அடிக்கடி ரிலாக்ஸ் பண்ணுங்க!!!
» செடிகளுக்கான உரங்கள் வீட்டிலேயே இருக்கு...
» வீட்டிலேயே இருக்கு அழகு டிப்ஸ்
» வறண்ட கூந்தலுக்கு...வீட்டிலேயே ஷாம்பு இருக்கு...
» கூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum