முடியை விரிச்சு போடாதீங்க...!!!
Page 1 of 1
முடியை விரிச்சு போடாதீங்க...!!!
தற்போது நிறைய பேருக்கு முடி உதிர்வது அதிகமா இருக்கு. அதுக்கு காரணம் அவங்க முடியை சரியா பராமரிக்காதது தான். மேலும் முடியை கட்டாமல் விரித்துப் போட்டாலும் முடி உதிரும். அதுவும் இந்த கோடையில் முடியைக் கட்டினால் மட்டுமே முடி உதிர்வதைத் தடுக்க முடியும். சரி, இப்ப எப்படியெல்லாம் இருந்தா முடி உதிராம இருக்கும்-னு பார்ப்போமா? 1. இரவில் தூங்கும் போது தலைக்கு ஸ்கார்ப் கட்ட வேண்டும். ஏனென்றால் முடியானது இரவில் வறண்டு, தளர்ந்து விடும். ஆனால் ஸ்கார்ப் கட்டினால் வறண்டுவிடாமல் இருக்கும். அதுவும் நீளமான முடி, சுருட்டை முடி இருப்பவர்கள் கட்டினால் நல்லது. இதற்கு முக்கிய காரணம், அப்படி கட்டினால் முடி சிக்காகாது. மேலும் வெளியே செல்லும் போது கட்டினால் சூரிய கதிர், அசுத்தக் காற்று மற்றும் தூசி போன்றவற்றிலிருந்து முடியைப் பாதுகாக்கலாம். இப்படி செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும். 2. இரவில் படுக்கும் முன் முடியை கட்டிக் கொண்டு படுக்க வேண்டும். ஏனென்றால் படுக்கும் போது நாம் ஒரே நிலையில் படுக்கமாட்டோம். இதனால் முடி சிக்கடைந்து, காலையில் நாம் தலை பின்னும் போது முடி கொத்து கொத்தாக வரும். ஆகவே முடியை கட்டினால் முடி உதிராது. 3. முடியைக் கட்ட நல்ல ரப்பர் பேண்டை வைத்து கட்ட வேண்டும். அப்படி ரப்பர் பேண்டை வைத்து கட்டும் போது, அந்த ரப்பர் பேண்ட் அந்த முடியை அறுக்கும் அளவுக்கு இல்லாமல், பார்த்து வாங்க வேண்டும். ரப்பர் பேண்டானது நன்கு பளபளப்பான துணி அல்லது சில்க் துணியில் இருந்தால் மிகவும் நல்லது. 4. கோடையில் சிறந்த ஹேர் ஸ்டைல்-னு சொன்னா அது போனி டைல். இதனால் முடி உதிராமல், உடையாமல் இருக்கும். ஆனால் முடியை விரித்து கொண்டு இருந்தால் காற்றில் உள்ள தூசிகள் முடியில் நுழைய ஈஸியாகிவிடுவதால், முடி உடைந்து உதிரும். மேலும் போனி டைல் ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலும் கூட. இவ்வாறெல்லாம் செய்தால் முடி உதிராமல் ஆரோக்கியமாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகிழ்ச்சிக்கு தாழ் போடாதீங்க
» கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!
» வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க...
» சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய
» நரை முடியை தவிர்க்க...
» கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!
» வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க...
» சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய
» நரை முடியை தவிர்க்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum