கூந்தலுக்கு 'ஹேர் ட்ரையர்' யூஸ் பண்ணாதீங்க...
Page 1 of 1
கூந்தலுக்கு 'ஹேர் ட்ரையர்' யூஸ் பண்ணாதீங்க...
இன்றைய அவசரக் காலத்தில் சரியாக சாப்பிடத்தான் நேரம் இல்லையென்று பார்த்தால், தலைக்கு குளித்தால் கூட கூந்தலை காய வைக்க நேரம் இல்லாமல் இருக்கிறது. அதனால் கூந்தலை காய வைப்பதற்கு என்று ஒரு மிசினான 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை.
இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது. அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு என்ன பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
Hair Care
முடியின் புறத்தோலில் பாதிப்பு- எப்போது கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துகிறோமோ, அப்போது அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் முடியில் ஏற்படுகிறது. இதனால் முடியின் புறத்தோல் பாதிக்கப்படுகிறது. அதுவே இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், இந்த பாதிப்பு நிரந்தரமாக இருக்கும் நிலை கூட ஏற்படும். ஆகவே கூந்தல் பலமிழந்து உதிருகிறது.
கூந்தல் உதிர்தல்- கூந்தல் உதிருவதற்கு ஒரு காரணம் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதும் ஒன்று. ஏனெனில் குளித்ததும் ர் ட்ரையரை பயன்படுத்தும் போது, முடித்துளைகள் சற்று தளர்ந்து இருக்கும். அப்போது அந்த இடத்தில் அதிகமான வெப்பம் படும்போது, கூந்தல் எளிதில் உதிருகிறது. மேலும் தலையில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் கூட, அது அப்படியே தங்கிவிடும். பின் கூந்தல் உதிர்தலை தடுப்பது கடினமாகிவிடும்.
கூந்தல் வறட்சி- கூந்தலுக்கு அதிக அளவு வெப்பம் செலுத்தும் போது, தலையில் உள்ள ஈரப்பசை அனைத்தும் போய்விடும். இதனால் கூந்தல் வறண்டுவிடுகிறது. மேலும் இது கூந்தலின் பொலிவை இழக்க வைத்துவிடும்.
முனைகளில் வெடிப்பு- எப்போது தலைக்கு குளித்தாலும் கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதால், அதிக அளவு வெப்பம் படுவதால், கூந்தலின் உள்ளே உள்ள லேயர்கள் பாதிக்கப்பட்டு, முனைகளில் நாளடைவில் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும்.
அழகான வடிவத்தை இழத்தல்- தொடர்ச்சியாக ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், சிறிது நாட்களில் கூந்தல் பொலிவிழந்து, இயற்கையான அழகை இழந்துவிடும். மேலும் உபயோகிக்கும் போதெல்லாம், சிறு சிறு முடிகளாக உதிரும். பின் அது அழகை இழந்து, கெட்டதாக காட்சியளிக்கும்.
ஆகவே எப்போதும் கூந்தலை காய வைக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தாமல், இயற்கையாக காய வைத்து, கூந்தலை ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!
» கணவரை கம்பேர் பண்ணாதீங்க! கிடைச்சதை வச்சு சந்தோசப்படுங்க!!
» கூந்தலுக்கு எமனாகும் ஹேர் ட்ரையர்
» கூந்தலுக்கு மெருகூட்டும் ஹேர் மாஸ்க்!
» பட்டு போன்ற கூந்தலுக்கு பழங்களை வைத்தும் ஹேர் மாஸ்க் செய்யலாம்!!!
» கணவரை கம்பேர் பண்ணாதீங்க! கிடைச்சதை வச்சு சந்தோசப்படுங்க!!
» கூந்தலுக்கு எமனாகும் ஹேர் ட்ரையர்
» கூந்தலுக்கு மெருகூட்டும் ஹேர் மாஸ்க்!
» பட்டு போன்ற கூந்தலுக்கு பழங்களை வைத்தும் ஹேர் மாஸ்க் செய்யலாம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum