மென்மையான கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க...
Page 1 of 1

Coconut Oil For A Lustrous Hair
அனைவருக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்களைப் பற்றி நன்கு தெரியும். இதுவரை அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவ மட்டும் தான் செய்வோம். சிலர் அந்த எண்ணெயை வைத்து தலைக்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். அதிலும் எண்ணெயை சூடேற்றி, காய வைத்து, பின் மசாஜ் செய்வார்கள். ஆனால் தற்போது கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, பட்டுப் போன்று மின்னுவதற்கு தேங்காய் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இப்போது அந்த தேங்காய் எண்ணெயை வைத்து எப்படி மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!!
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிறிது நேரம் மசாஸ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புவால் கூந்தலை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஹென்னா- ஹென்னா கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதேசமயம் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கூந்தல் வறட்சியடையாமலும், உதிராமலும் இருக்க, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை, ஹென்னாவுடன் கலந்து, கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை- முட்டையை உடைத்து, ஒரு பௌலில் ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பூந்திக்கொட்டை- இது ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயுடன், 3-4 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பவுடரை போட்டு கலந்து, முடிக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வது நிற்பதோடு, கூந்தலின் முனைகளில் ஏற்படும் வெடிப்பும் குறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை- தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு எண்ணெய் பசையுடன இருப்பதோடு, பொடுகு இல்லாமலும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை- கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் பட்டுப் போன்று இருக்க, தேங்காய் எண்ணெயுடன் முட்டையை கலந்து, கூந்தலுக்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது நன்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் முட்டை வாசனை வரும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, மென்மையாக பொலிவோடு காணப்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க…
» கூந்தல் உதிருதா? யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....
» ஈறு பேன் தொல்லை இல்லா கூந்தல் வேண்டுமா? வேப்ப எண்ணெய் பூசுங்க !
» முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை யூஸ் பண்ணுங்க...
» அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum