கூந்தல் வறட்சியைப் போக்கும் வாழைப்பழ ஹேர் பேக்குகள்!!!
Page 1 of 1
கூந்தல் வறட்சியைப் போக்கும் வாழைப்பழ ஹேர் பேக்குகள்!!!
இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் கூந்தல் உதிர்தலும் ஒன்று. இந்த கூந்தல் உதிர்தலை தடுக்க நிறைய செயல்களை முயற்சி செய்திருப்போம். ஆனால் அதில் ஒருசில சிகிச்சைகள் மட்டுமே கூந்தல் உதிர்தலைத் தடுத்து, வளர்ச்சியை அதிகரிக்கும். அதிலும் ஹேர் பேக்குகள் போட்டால், கூந்தல் உதிர்தலை தடுப்பதோடு, கூந்தலும் மென்மையாக அடர்த்தியாக இருக்கும்.
ஹேர் பேக்குகளில் நிறைய உள்ளன. அதிலும் அந்த ஹேர் பேக்குகளில் தயிர், தேன், வினிகர், முட்டை போன்ற பொருட்களை தான் பயன்படுத்தியிருப்போம். ஆனால் வாழைப்பழத்தை வைத்து ஹேர் பேக் போடலாம் தெரியுமா? ஆம், வாழைப்பழத்தில் கூந்தலுக்கான நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் இதனை வைத்து ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் தடுக்கப்படுவதோடு, வறட்சி நீங்கி, கூந்தல் மென்மையாக அடர்த்தியாக வளரும். அதுமட்டுமின்றி, இந்த ஹேர் மாஸ்க் பொடுகுத் தொல்லையைத் தடுக்கும். இப்போது அந்த வாழைப்பழத்தை வைத்து எப்படி ஹேர் மாஸ்க் போடுவது என்று பார்ப்போமா!!!
Banana Hair Packs For Dry Hair
வாழைப்பழ ஹேர் மாஸ்க்குகள்...
வாழைப்பழம் மற்றும் பால் பேக்: வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் உதிராமல், நன்கு மென்மையோடு இருக்கும்.
வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் பேக்: இந்த பேக்கில் வாழைப்பழ கூழுடன், தயிர், சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொண்டு, வேண்டுமெனில் சிறிது எலுமிச்சை சாற்றையும் விட்டு, கூந்தலில் தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
வாழைப்பழம் மற்றும் பாதாம் ஹேர் பேக்: கூந்தல் வறட்சி அதிகம் உள்ளவர்களுக்கு இந்த ஹேர் பேக் சரியாக இருக்கும். அதற்கு பாதாம் மற்றும் வாழைப்பழத்தை அரைத்து, அத்துடன் தயிர் அல்லது பால் சேர்த்து, கூந்தலில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
முட்டை மற்றும் வாழைப்பழ மாஸ்க்: பொதுவாக முட்டை கூந்தலுக்கு மிகுந்த மென்மை மற்றும் பொலிவைத் தரும். இந்த ஹேர் பேக் பொடுகுத் தொல்லையை தடுக்கும். அதற்க முட்டையின் வெள்ளைக்கருவுடன், கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பேஸ்ட் போன்று செய்து, கூந்தலில் தடவி, 45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.
மேற்கூறியவையே ஹேர் மாஸ்க்குகளை வறட்சியான கூந்தல் உள்ளவர்கள் போட்டால், வறட்சியால் ஏற்படும் கூந்தல் உதிர்வை தடுக்கலாம். முக்கியமாக வறட்சியான கூந்தல் உள்ளவர்கள், இந்த மாஸ்க்குகளை போடும் போது, சிறிது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, 30 நிமிடம் ஊற வைத்து, கூந்தலில் தடவ வேண்டும். வேறு ஏதாவது ஹேர் மாஸ்க்குகள் உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் ஹேர் பேக்குகள்!!!
» குளிர்காலத்திற்கு ஏற்ற ஹேர் பேக்குகள்!!!
» பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்
» கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழிகள்...
» கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க்குகள்!!!
» குளிர்காலத்திற்கு ஏற்ற ஹேர் பேக்குகள்!!!
» பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்
» கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழிகள்...
» கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க்குகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum