வீரப்ப அய்யனார் கோவில்
Page 1 of 1
வீரப்ப அய்யனார் கோவில்
வாழ்க்கையில் கஷ்டம், குறைகள் என ஏதாவது வந்து வருத்தத்தை தந்து குடும்பத்தில் மன நிம்மதியில்லாமல் செய்து விடுகிறது. மனநிம்மதியில்லாத சூழ்நிலையில் வாழ்க்கையில் ஏற்படும் விரக்தியை விரட்டி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க செய்யும் வீரப்ப அய்யனார் கோவிலுக்கு தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளியிலிருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
கோவில் அமைப்பு...
சுயம்பு தோற்றமான அய்யனார் சிவ வடிவங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறார். பொதுவாக சுயம்புத் தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே சிறப்பு என்பதால் வீரப்ப அய்யனார் கோவில் பெரிய அளவில் கட்டப்பட்டு இருந்தாலும் கருவறைக்கு மேலே மேற்கூரை எதுவும் அமைக்கப்படவில்லை.
கோவில் மூலவரின் இருபுறமும் இரு சுயம்புத் தோற்றங்களும், பின் பகுதியில் ஒரு சுயம்புத் தோற்றமும் உள்ளது. பின் பகுதியிலிருப்பது கோவிலின் பின் பகுதியிலுள்ள மலையின் மேல் இருக்கும் சொக்கநாதர் என்றும் இருபுறமும் இருப்பது தேனியில் பங்களாமேடு பகுதியிலிருக்கும் சோலைமலை அய்யனார், உழவர் சந்தைக்கு அருகிலுள்ள குரு வீரப்ப அய்யனார் என்றும் சொல்கின்றனர்.
வீரப்ப அய்யனார் கோவிலில் வழிபட்டால் நான்கு கோவில்களிலும் வழிபட்ட பலனை அடைய முடியும் என்கின்றனர். கோவிலின் வெளியே வலதுபுறம் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் கோவில் ஒன்று உள்ளது. முன்பகுதியில் காவல் தெய்வமான கருப்பசாமி கோவில் உள்ளது.
கோவிலின் இடதுபுறம் கீழ் பகுதியில் சப்த கன்னியர்கள் சிலையும், மேல் பகுதியில் விநாயகர் சிலையும் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்திற்குள் செல்லும் முன்பாக குதிரை மேல் அமர்ந்த நிலையில் மிகப்பெரிய கருப்பசாமி இருக்கிறார்.
இவர் இந்தப்பகுதி முழுவதும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். தேனி அல்லிநகரம் நகரத்திற்கு மேற்காக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது,

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வீரப்ப அய்யனார் கோவில்
» அய்யனார் கோயில் - வாடிப்பட்டி
» அய்யனார் கோயில் - வாடிப்பட்டி
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
» அய்யனார் கோயில் - வாடிப்பட்டி
» அய்யனார் கோயில் - வாடிப்பட்டி
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum