கால்களில் இருந்து கப்ஸ் கிளம்புதா? இதப்படிங்க!
Page 1 of 1

கோடை காலத்தில் அதிகமாக வியர்த்து நாற்றமடிக்கும் இடங்களில் பாதங்களும் ஒன்று. பாக்டீரியாக்கள் எளிதாக பாதங்களை தாக்குவதால் புண்கள் ஏற்பட்டு பாதங்களில் இருந்து துர்நாற்றம் கிளம்பும். இந்த நாற்றமானது சுற்றியிருப்பவர்களை முகம் சுழிக்கச் செய்யும் எனவே பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம்.
வாசனைத் தைலம்
ஷூ அணிந்து கொண்டிருப்பவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்து ஷூவை கழற்றினாலே கப் அடிக்கும். இதற்கு காரணம் காலில் ஏற்படும் வியர்வையும், கால்களில் உள்ள புண்களுமே. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கால்களின் துர்நாற்றத்தைக் கட்டுப் படுத்த முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பாதங்களை உலர்வாக வைத்திருப்பதில் டால்கம் பவுடருக்கு சிறந்த பங்குண்டு. அதேபோல் பேக்கிங் சோடா, கார்ன் ப்ளவர் போன்றவைகளை உபயோகிக்கலாம். பாதங்களில் சந்தனத்தை பூசி மென்மையாக்கலாம். பாதங்கள் இயல்பாய், புத்துணர்ச்சியோடு சுவாசிக்கும்.
ஆன்டி பாக்டீரியல் சோப்
கோடை காலத்தில் சாதாரண சோப்பிற்கு பதிலாக ஆன்டிபாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். இது புண்கள் ஏற்படுவதில் இருந்து பாதங்களை காக்கிறது.
கால்களில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க துத்தநாகம் சிறந்தது. உங்களின் உடலில் சரியான அளவிற்கு துத்தநாகம் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
நீரை கொதிக்க வைத்து அதில் டீ தூளைப் போட்டு ஊறவைக்கவும். இதில் பாதங்களை மூழ்கவைத்து பின்னர் உலர்த்தலாம். இதனால் புண்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இயற்கை ஸ்கிரப்
பாதங்களை ஸ்க்ரப் கொண்டு தேய்க்கலாம். இஞ்சி, முள்ளங்கி, எலுமிச்சை ஆகியவற்றை அரைத்து பேஸ்ட் போல செய்து பாதங்களில் தேய்க்கலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை செய்யவேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் உலர்ந்த காட்டன் டவலால் துடைக்கவும். கால்களை எப்போதும் உலர்வாக வைத்திருந்தாலே எந்த நோய்களும் தாக்காது.
வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை மிக்ஸ் செய்து அதில் பத்து நிமிடங்கள் கால்களை ஊறவைக்கவும். வாரத்திற்கு ஒருமுறையாவது இதை செய்வது நல்லது.
உலர்வான பாதங்கள்
சிலர் செருப்பு எதுவும் அணியாமல் வெறும் காலோடு நடப்பர். இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. செருப்பு போடும் போது, வெயிலைத் தடுக்கும் கிரீமை கால்களில் தடவ வேண்டும். கால்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டிருப்போர், வருடத்திற்கு ஒரு முறை போடியாட்ரிக் மருத்துவரை அணுகுவது சிறந்தது. இல்லையென்றால், புண் மற்றும் கொப்புளம் ஏற்பட்டு, மிகப்பெரிய நோயை உண்டாக்கும்.
எப்போதும் பாதங்களை கழுவி சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்சை பயன்படுத்துவது சிறந்தது. ஒரே ஷூவை தொடர்ந்து போடாமல், மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பாதங்களில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?
» ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !
» ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» தெர்மாஸ் ஃப்ளாஸ்க் சுத்தமா இருக்கணுமா? இதப்படிங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum