இளமையா இருக்கணுமா நத்தை மசாஜ் செய்யுங்களேன்!
Page 1 of 1

காய்கறிகளை முகத்தில் பூசியாகிவிட்டது. சந்தனத்தையும், தயிரையும் தடவியாகிவிட்டது. பழச்சாறுகளை ஊற்றி குளிப்பாட்டியாகிவிட்டது. இப்போது நத்தையைக் கொண்டு மசாஜ் செய்யத்தொடங்கிவிட்டனர். இந்த நத்தை மசாஜ் முகச்சுருக்கத்தைப் போக்குவதோடு இளமையை தக்க வைப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள்.
மூன்று நாடுகளுக்கு இடையே போட்டி
மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இப்போது சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நத்தை மசாஜ் கலாசாரம் அடி எடுத்து வைத்துள்ளது.
முகத்தில் நத்தை கையில் காசு
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள அழகு நிலையங்களில் சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
எகிப்தில் தொடங்கிய மசாஜ்
இந்த நத்தை மசாஜ் கலாச்சாரம் கி.பி 16ம் நூற்றாண்டில் எகிப்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் படிப்படியாக முக்கிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவில் அடிஎடுத்து வைத்துள்ளது. ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி க்ரிஷி வைத்தியசாலாவில் இந்த நத்தை மசாஜ் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு ஆப்ரிக்க காடுகளில் உள்ள நத்தைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ் மூலம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தமும் சரியாகிறதாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...
» கேரளத்தை தாக்கும் ஆப்ரிக்க ராட்சச நத்தை!
» பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்
» தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா? இதை முயற்சி செய்யுங்களேன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum