தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விதி!!!!! விதி!!!!!

Go down

விதி!!!!!  விதி!!!!!  Empty விதி!!!!! விதி!!!!!

Post  meenu Thu Feb 07, 2013 12:45 pm

எல்லாம் விதிப்படிதான் நடக்குமெனில் ஜாதகம் பார்ப்பது எதற்கு ? கடவுள் வழிபாடு எதற்கு ?

அருமையான கேள்வி, நடக்கும் நன்மை தீமை பலன்களை நமது மனம் ஏற்றுகொள்ளவும் , அடுத்தகட்ட நிகழ்வுக்கு மனிதனை எடுத்து செல்லவும் நிச்சயம் நமக்கு ஜோதிட ஆலோசனையும்
, கடவுள் வழிபாடும் தேவை , ஒருவருக்கு சரியான ஜோதிட ஆலோசனை கிடைக்கிறது எனில் நிச்சயம் அவர் தனது வாழ்க்கை முறையை சரியான பாதையில் அமைத்துக்கொள்ள முடியும் , தேவையில்லாத காரியங்களை செய்துவிட்டு பிறகு தவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தாமே ஏற்ப்படுத்தி கொள்ள தேவையில்லையே , உண்மையில் தனக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இல்லை என்று ஒருவருக்கு தெரியும் பொழுது தனது பெயரில் ஒருவர் தொழில் துவங்காமல் ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பவரின் பெயரில் ஆரம்பித்து நிச்சயம் வெற்றி காணலாமே? இதற்க்கு நிச்சயம் உறுதுணை புரியும் நமது ஜோதிட கலை

( உண்மையில் ஒருவருடைய ஜீவன ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்று இன்னும் பல ஜோதிடர்களுக்கு தெரியவில்லை என்பது வேறு விஷயம் )


அடுத்து ஒருவருடைய வினைபதிவினாலேயே நன்மை தீமை பலன்கள் நடை முறைக்கு வருகிறது எனும் பொழுது , ஒரு தம்பதியரின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை சச்சரவுகள் , மன நிம்மதி இழப்பு , மேலும் பல இன்னல்கள் ஏற்ப்படும் பொழுது இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று உணராமல் தனது மனம் போல் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் ( அதாவது பிரிவு , விவாகரத்து ) அமைப்பில் இருந்து ஜாதகரை காப்பாற்றலாம் , எப்படி எனில் அய்யா தங்களின் வாழ்க்கையில் நடக்கும் தீமையான அமைப்பிற்கு காரணம் தங்களின் வினை பதிவே எனவே தங்களது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்யுங்கள் நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்களின் கர்ம வினை பதிவு அகன்று சம்பந்த பட்ட அமைப்பில் இருந்து ( குடும்பம் , களத்திரம் ) நன்மையான பலனை அனுபவிக்க முடியும் என்ற உண்மையான ஜோதிட பலனை சொல்லி ஜாதகரை நெறி முறையான வாழ்க்கைக்கு வழிகாட்டலாம் , ஒருவேளை ஜாதகர் ஜோதிட ஆலோசனை பெறவில்லை எனில் தனது விதிப்படி மேலும் மேலும் கர்ம வினைபதிவை அதிகமாக செய்துகொண்டே இருப்பார் அதனால் சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து மேலும் மேலும் தீமையான பலன்களே நடை பெற்று கொண்டு இருக்கும் என்பதே உண்மை .


தனது ஜாதக அமைப்பின் படி என்ன இருக்கிறது என்று தெரியாமல் வாழ்க்கையில் போராடி கொண்டு இருப்பதை காட்டிலும் , சரியான வாழ்க்கையை வாழ்வதற்கு நமது ஜோதிட கலை பயன்படுகிறது எனும் பொழுது , ஜோதிடத்தை பயன் படுத்தி கொள்வதில் என்ன தவறு இருக்க போகிறது , உண்மையில் நாங்கள் சொல்லும் கோவில் வழிபாட்டிற்கு பின்னால் ஒரு சூட்ட்சமம் இருக்கிறது என்பதை எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை , மேலும் அதை பற்றி அவர் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை , உதரணமாக எந்த கடைக்கு சென்றால் காய்கறி வாங்கலாம் என்று ஒருவருக்கு தெரிந்தால் போதும். அது எங்கு விளைகிறது , விளைவிப்பவர் யார் , என்ன உரம் இடுகிறார் , எவ்வளவு நாட்களில் விளைச்சலுக்கு வருகிறது என்பது பற்றி விபரங்கள் எல்லாம் வாங்குபவர்க்கு தேவையில்லை , எந்த கடையில் காய்கறி கிடைகிறது ,என்று தெரிந்தால் மட்டுமே போதும் அங்கு சென்று வாங்கி வந்து குழம்பு வைத்து சாப்பிடலாம் அதனால் கிடைக்கும் சக்தியை உடலுக்கு பெற்று கொள்ளலாம் .


எனவே கோவில் வழிபாடுகளிலும் இதையே தான் நாம் பெற்று கொள்கிறோம் , ஒருவர் கோவில் வழிபாடு செய்வதும் , கடவுள் வழிபாடு செய்வதும் கூட சுய ஜாதகத்திற்கு உட்பட்டும் , வினை பதிவிற்கு உட்பட்டும் நடை பெறுகிறது என்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை , அதாவது " நீ விதியை மதியால் வெல்வாய் எனில் " உனது ஜாதகத்தில் அப்படி பட்ட விதி இருக்கும் என்பதே உண்மை . ஒருவருக்கு பூர்வ புண்ணியம் , பாக்கியம் பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்து கொள்வோம் , அவருக்கு கோவில் வழிபாடும் , கடவுள் வழிபாடும் செய்ய நிச்சயம் யோகம் இல்லை , ஒருவேளை ஜாதகர் கோவில் வழிபாடு செய்ய முயற்ச்சித்தால் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை , சம்பந்த பட்டவரின் நண்பரின் ஜாதகத்தில் மேற்கண்ட வீடுகள் வலிமை பெற்றிருந்து அவருடன் கோவில் வழிபாடு செய்யவும் , கடவுள் வழிபாடு செய்யவும் ஜாதகர் சேர்ந்து சென்றால் மட்டுமே ஜாதகருக்கு கடவுள் அனுகிரகம் கிடைக்க வாய்ப்பு உண்டு , இதற்க்கு அவரது நண்பரின் புண்ணிய பதிவே காரணம் .


நடக்கும் நன்மை தீமை , அனைத்திற்கும் நமது முன்வினை பதிவும் , கர்ம வினை பதிவுமே காரணம் , இதற்க்கு உட்ப்பட்டே பிறப்பில் நமது ஜாதகம் அமைகிறது , தமது சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கிறது , எவையெல்லாம் பாதிக்க பட்டு இருக்கிறது என்று சிறந்த ஜோதிடரின் மூலம் தெளிவாக தெரிந்து கொண்டு , சம்பந்த பட்ட பாவகங்களில் இருந்து வரும் நன்மை தீமை பலன்களை ஏற்றுக்கொண்டு , கர்ம வினை பதிவை கழித்து கொள்ள இறைஅருள் நமக்கு தந்த, இந்த ஒரு அறிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு இறை நிலையின் உண்மையை இறுதியில் உணர்வதே சிறப்பு .


எடுத்து காட்டாக :


ஒருவருடைய ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் பாதிக்க பட்டு இருக்கிறது
எனில் , தனது சகோதர அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுகொள்ளும் பொழுது , சிறிது காலத்தில் சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து தீமையான பலன்கள் கழிந்து , நன்மையான பலன்கள் நடை பெற ஆரம்பிக்கும் , அதாவது ஜாதகரின் மன தைரியம் அதிகமாகும் , தன்னம்பிக்கை கூடும் , சிறு பயணங்களால் யோகம் பெறுவார் , சகோதரர்களால் நன்மை அடைவார் , எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும் , ஒருவேளை ஜாதகர் இதை உணராமல் மீண்டும் மீண்டும் சகோதர அமைப்பிற்கு இன்னல்கள் புரிந்தால் , சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து தீமையான பலன்களே அதிகம் நடை பெறும் என்பது குறிப்பிட தக்கது .
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum