குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...
Page 1 of 1

குளிர்காலத்தில் பிறந்த குழந்தையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் குழந்தைகளால், குளிரை தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவர்களுக்கு சளி அல்லது ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். எனவே அவர்களை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருப்பதற்கு, அவர்களுக்கு சரியான உடை அணிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களின் சருமம் வறட்சியடைந்துவிடும். ஆகவே அதிலும் கவனத்தை செலுத்த வேண்டும். சொல்லப்போனால், மற்ற காலத்தை விட இந்த காலத்தில் குழந்தையின் பராமரிப்பு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். இப்போது குழந்தைகளுக்கு எங்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* புது அம்மாக்களுக்கு ஒரு முக்கியமான குளிர்கால டிப்ஸ் என்றால் அது இந்த காலத்தில் குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் உடலானது மிகவும் சென்சிட்டிவ்வானது. எனவே அவர்கள் உடலை நோய்கள் எளிதில் தாக்கிவிடும். எனவே இந்த காலத்தில் அவர்களுக்கு வெதுவெதுப்பை அளிக்கும் உடையை உடுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு குளிரை தாக்காமல் இருப்பதற்கு, தொப்பி, ஜாக்கெட் போன்றவற்றை உடுத்துவித்தால் பிடிக்காது. அவர்கள் அவற்றை அகற்ற நினைப்பார்கள். ஆகவே தொப்பியை போடும் போது, அவர்கள் கழற்றாதவாறு கட்டிவிட வேண்டும்.
* குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடையும். எனவே குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ண்டும். மேலும் குழந்தைகளுக்கு டயப்பரை அடிக்கடி மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பேபி பவுடரை உடல் முழுவதும் போட்டு விட வேண்டும். இதனால் அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். உடைகள் அணிவிக்கும் போதோ அல்லது அவர்களுக்கு துணியை பயன்படுத்தும் போதோ ஈரம் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை வரவழைத்துவிடும்.
* குழந்தைகளின் சருமமும் குளிர்காலத்தில் மாற்றமடையும். எனவே எதை மறந்தாலும் குழந்தைகளின் குளிர்காலப் பராமரிப்புகளை மறக்க வேண்டாம். ஆகவே எப்போது குழந்தைகளை குளிப்பாட்டிய பின்பு, பேபி மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். அதேப் போல் குளிப்பாட்டுவதற்கு முன்பு, எண்ணெயால் மசாஜ் செய்வதை மறக்க வேண்டாம். அதிலும் வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து குளிப்பாட்டினால், குழந்தைகளின் எலும்புகள் வலுவடையும்.
* அதிகமாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில் குளிர்காலமானது பிறந்த குழந்தைக்கும் மற்றும் புது அம்மாவிற்கும் ஆரோக்கியமற்றது. தாய்ப்பால் கொடுக்கும் போது குளிர்ச்சியான பொருளை அம்மா குடித்தாலும், அது குழந்தைக்கு சளியை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் ஆரோக்கியத்திற்காக குளிர்காலத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் குளிர்காலத்தில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால், உடலானது வைட்டமின் டி சத்துக்களை உறிஞ்சுவதோடு, சூரியக்கதிர்கள் சருமம் மற்றும் துணியில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடும்.
* வறண்ட மற்றும் வெடிப்புள்ள உதடுகள் பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று நினைக்க வேண்டாம். சிறிய மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு கூட ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு, இந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு பேபி ஆயில் அல்லது லிப் பாமை தடவினால், உதடுகளில் வறட்சி ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.
மேற்கூறியவாறு குழந்தையை பராமரித்து வந்தால், எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். வேறு என்ன செய்யலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பனிக்காலத்தில் பட்டுக்குட்டிகளை பத்திரமா பாத்துக்கங்க!
» தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கங்க!
» உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க
» குளிர்காலத்துல கூந்தல் ஆரோக்கியமா இல்லைன்னு எப்படி தெரிஞ்சுக்குறது?
» பெருங்குடலை பத்திரமா பாத்துக்கங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum