சுவையான தோசை ரெஸிபி
Page 1 of 1
சுவையான தோசை ரெஸிபி
Dosa
தோசை அனைத்து தரப்பினரும் உண்ணக்கூடிய உணவு. எளிதாக செய்யலாம். இதில் பல வெரைட்டி உண்டு. தக்காளிதோசை, பொடிதோசை, ஆனியன்தோசை, காரட் தோசை, பீட்ரூட் தோசை என பல வகை உண்டு. குழந்தைகளுக்கு கோடை விடுமுறையில் பலவகை தோசைகளை செய்து கொடுத்து அசத்தலாம்.
தோசை மாவு அரைக்க
அரிசி : 4 கப்
உளுந்து : 1 கப்
வெந்தையம் – 2 டீ ஸ்பூன்
பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
இவற்றை ஒன்றாக 4 மணி நேரம் வரை ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.
வெரைட்டி தோசைக்கு தேவையான பொருட்கள் :
தக்காளி பொடியாக நறுக்கியது - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 கப்
பருப்பு பொடி 1 கப்
பருப்பு பொடி செய்முறை
உளுந்தம் பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த கறிவேப்பிலை – 1 கப்
வரமிளகாய் – 5
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
இந்த பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கரகப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த பொடி இட்லி, தோசைக்கு ஏற்றது. பொடி தோசை செய்யவும் உபயோகிக்கலாம்.
தக்காளி தோசை
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்த உடன் தோசை மாவை ஊற்றவும். அதன் மேல் நறுக்கி வைத்த தக்காளியை தூவி லேசாக எண்ணெய் விடவும். மூடி போட்டு வேகவிடவும். பின்னர் திருப்பி போட்டு வேகவிடவும். சுவையான தக்காளி தோசை தயார்.
ஆனியன் தோசை
தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல மாவை ஊற்றவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை மிதமாக தூவவும். எண்ணெய் விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பின்னர் வெந்த உடன் திருப்பி போட்டு வேகவிடவும். மொறு, மொறு ஆனியன் தோசை தயார்.
பொடி தோசை
தோசை மாவை கல்லில் ஊற்றவும். அதன் மீது பருப்பு பொடியை தூவவும். வேகும் போது சுற்றி நெய் விடவும். மூடிபோட்டு சிம்மில் வேகவிடவும். இதை திருப்பி போடத் தேவையில்லை. சுவையான பொடி தோசை தயார்.
இந்த தோசைகளுக்கு தேங்காய் சட்னி, அல்லது கொத்துமல்லி சட்னி செம காம்பினேசன். சுட்டீஸ்க்கு செய்து கொடுத்து அசத்துங்களேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான ஓமப்பொடி ரெஸிபி
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» காரசார லெமன் சிக்கன் ரெஸிபி
» ரவா லட்டு ரெஸிபி
» சிக்கன் மஞ்சூரியன் ரெஸிபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum