மீல் மேக்கர் மசாலா!
Page 1 of 1
மீல் மேக்கர் மசாலா!
Meal maker
சாதாரணமாக மீல்மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சமைப்போம். ஆனால் அந்த மீல்மேக்கரை சைடு டிஷ்சாக கூட செய்யலாம். இது சப்பாத்தி, பூரி, பிரைடு ரைஸ் போன்றவற்றிற்கு சிறந்ததாக இருக்கும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது. சரி, செய்யலாமா!!!
தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 1/2 கப்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 7
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 7 பல்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய், கறிவேப்பிலை, தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் மீல் மேக்கரைப் போடவும். பின் அதை அரை மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் தண்ணீர் இல்லாமல் இறுகப் பிழிந்து வடித்து எடுக்கவும்.
பிறகு தேங்காய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை அதில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கரை அதில் போட்டு, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மீல்மேக்கர் வெந்ததும் நன்றாக கிண்டி இறக்கவும்.
இப்போது சுவையான மீல்மேக்கர் மசாலா ரெடி!!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீல் மேக்கர் கோப்தா!!!
» மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு
» மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு
» மொரு மொரு மீல் மேக்கர் பக்கோடா
» பேஸ் மேக்கர் பேஸ் மேக்கர்
» மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு
» மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு
» மொரு மொரு மீல் மேக்கர் பக்கோடா
» பேஸ் மேக்கர் பேஸ் மேக்கர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum