சத்தான... சாண்விட்ச் இட்லி
Page 1 of 1
சத்தான... சாண்விட்ச் இட்லி
sandwich idly
இட்லியானது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் உளுந்து உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது. பொதுவாக இட்லி செய்தால் அதற்கு ஏதாவது சட்னி, சாம்பாரை சைடு டிஸ் ஆக தான் தொட்டு சாப்பிடுவோம். ஆனால் சாண்விட்ச் இட்லிக்கு எந்த ஒரு சட்னியும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். மேலும் இந்த இட்லி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு டிபன் ஆக இருக்கும். இந்த சாண்விட்ச் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
மசாலாவுக்கு :
கேரட் - 1
பீன்ஸ் - 2
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, பின் கடுகு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதோடு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், அத்துடன் தக்காளி, நறுக்கிய காய்கறிகள், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் பச்சை வாசனை போனதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, அந்த மசாலாவை இறக்கி வைக்க வேண்டும்.
அடுத்து இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு இட்லித் தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அதன் மேல் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
மாவானது நன்கு வெந்ததும் அதனை எடுத்து பரிமாறுங்கள். இப்போது சுவையான சாண்விட்ச் இட்லி ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாண்விட்ச் இட்லி
» சத்தான காய்கறி இட்லி!
» சத்தான காய்கறி இட்லி!
» ஈஸியான… முட்டை சாண்விட்ச்
» ஈஸியான... முட்டை சாண்விட்ச்
» சத்தான காய்கறி இட்லி!
» சத்தான காய்கறி இட்லி!
» ஈஸியான… முட்டை சாண்விட்ச்
» ஈஸியான... முட்டை சாண்விட்ச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum