சுவையான... தக்காளி சாதம்!!!
Page 1 of 1
சுவையான... தக்காளி சாதம்!!!
குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும். ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது. இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும். இப்போது அந்த தக்காளி சாதத்தை செய்வது எப்டியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்
தக்காளி - 5
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும்.
கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும்.
பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி வேண்டிய அளவு உப்பை சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும்.
பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும். இப்போது சுவையான தக்காளி சாதம் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான…தக்காளி இட்லி!!!
» சுவையான...தக்காளி இட்லி!!!
» சுவையான… மாங்காய் சாதம்
» தக்காளி சாதம்
» தக்காளி சாதம்
» சுவையான...தக்காளி இட்லி!!!
» சுவையான… மாங்காய் சாதம்
» தக்காளி சாதம்
» தக்காளி சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum