மக்காச்சோள கூட்டு
Page 1 of 1
மக்காச்சோள கூட்டு
உடல் எடை குறைய வேண்டும் என்று இருப்பவர்கள், சோளத்தை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அவ்வாறு கடையில் வாங்கும் சோளத்தை வேக வைத்து சாப்பிடுவதை விட, அதை ஒரு டிஷ்ஷாக செய்து சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இப்போது அந்த மக்காச்சோள கூட்டை எப்படி செய்சதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மக்காச்சோளம் - 5
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 6 பல்
கசகசா - 2 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
பட்டை - 1
இலவங்கம் - 2
தேங்காய் - 1 மூடி (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மக்காச்சோளத்தை நன்கு வேக வைத்து, அதில் உள்ள சோளத்தை பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
பின் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்கு தண்ணீர் விட்டு அரைத்து, பால் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மசாலாவிற்கு பூண்டு, கசகசா, மல்லி, பச்சை மிளகாய், பட்டை, இலவங்கம் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, சோளத்தை போட்டு, கிளற வேண்டும்.
சற்று நேரம் கழித்து, தேங்காய் பாலை ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
இப்போது மக்காச்சோள கூட்டு ரெடி!!! இதனை சப்பாத்தி அல்லது சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் நன்கு அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மக்காச்சோள பூரி
» மக்காச்சோள ரொட்டி
» மக்காச்சோள புலாவ்
» சமையல்:மக்காச்சோள பால்கூட்டு
» சமையல்:மக்காச்சோள புலாவ்
» மக்காச்சோள ரொட்டி
» மக்காச்சோள புலாவ்
» சமையல்:மக்காச்சோள பால்கூட்டு
» சமையல்:மக்காச்சோள புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum