தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொத்தமல்லி சட்னி

Go down

கொத்தமல்லி சட்னி Empty கொத்தமல்லி சட்னி

Post  ishwarya Wed Feb 06, 2013 1:20 pm



Coriander chutney
தோசை, இட்லி போன்றவற்றிற்கு தேங்காய் சட்னியைத் தான் பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். ஆனால் இப்போது உடலுக்கு சற்று ஆரோக்கியத்தை தரும் வகையில் கொத்தமல்லியை வைத்து விரைவில் ஈஸியாக ஒரு சட்னியை செய்யலாம். அந்த கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - 1 கட்டு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1
வரமிளகாய் - 5
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொத்தமல்லியின் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும்.

பின் வரமிளகாயை போட்டு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் தக்காளியை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

சூடானது ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum