அசாரி பன்னீர் புலாவ்
Page 1 of 1
அசாரி பன்னீர் புலாவ்
இந்திய உணவுகள் என்றாலே அது காரசாரமான உணவுகளுக்கு சிறந்தது. அத்தகைய காரசாரமான உணவு வகைகளில் அசாரி சிக்கன், புலாவ், குழம்பு என்று பல இருக்கின்றன. இப்போது இந்த வகைகளில் அசாரி புலாவ் மிகவும் சிறந்த சுவையுடையது. இதனை காலை அல்லது மதிய வேளையில் வீட்டில் செய்து சாப்பிட சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த அசாரி புலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
குங்குமப்பூ - 2 சிட்டிகை
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அசாரிக்கு...
பன்னீர் - 2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி, அதை குக்கரில் போட்டு, தண்ணீர், உப்பு மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி, பின் அதனை குளிர வைக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் பால் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து, ஊற வைத்து, பின் சாதத்துடன் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தயிர், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், கடுகு, சோம்பு, கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைஸாக அடித்து கொள்ளவும்.
பிறகு அந்த பேஸ்ட்டை பன்னீர் துண்டுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பேஸ்ட்டை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது அதில் சாதம் மற்றும் பொரித்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சில நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான அசாரி பன்னீர் புலாவ் ரெடி!!! இதனை விருப்பமான சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியான... பன்னீர் புலாவ்!!!
» காரசாரமான...அசாரி கோஸ்ட் (மட்டன்)
» தமிழ்ப் பன்னீர்
» ஷாகி பன்னீர்
» பன்னீர் பக்கோடா
» காரசாரமான...அசாரி கோஸ்ட் (மட்டன்)
» தமிழ்ப் பன்னீர்
» ஷாகி பன்னீர்
» பன்னீர் பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum