வாழைக்காய் கிரேவி
Page 1 of 1
வாழைக்காய் கிரேவி
அமாவாசை தினத்தில் தீபாவளி வருவதால், அப்போது அசைவ உணவுகளை சாப்பிட முடியாது. அன்றைய தினம் அனைத்து வீடுகளிலும் சைவ உணவுகள் தான். ஆகவே அப்போது அதில் வாழைக்காயை ஒரு கிரேவி போல் செய்தால், சூப்பராக இருக்கும். இப்போது அந்த வாழைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று பார்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 5
கடுகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5
இஞ்சி - 1/2 இன்ச்
அரிசி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் அரிசியை தண்ணீர் ஊற்றி, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பின் வாழைக்காயின் தோலை சீவி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, அரிசி பேஸ்ட்டை போட்டு, மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் புளி சாற்றை சேர்த்து நன்கு கலந்து, 2 கப் தண்ணீர் மற்றும் உப்பை போட்டு கலக்க வேண்டும்.
மசாலாக் கலவையானது கொதித்ததும், அதில் வாழைக்காயை சேர்த்து, மசாலா சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான வாழைக்காய் கிரேவி ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum