தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பட்டர் நாண்

Go down

பட்டர் நாண் Empty பட்டர் நாண்

Post  ishwarya Wed Feb 06, 2013 11:58 am

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு என்னவென்றால், அதனை நேரடியாக நெருப்பில் சுடுவது தான். ஆனால், அந்த நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம். இப்போது அந்த நாணை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்
ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2/3 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைக்க வைக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.

பின்பு அதனை 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனால் மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று சற்று மொத்தமாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை வைக்க வேண்டும்.

நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

இப்போது சுவையான பட்டர் நாண் ரெடி!!! இதனை கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு: இதனை தோசைக்கல் அல்லது தவாவில் சாதாரண சப்பாத்தி போன்று வெண்ணெய் மட்டும் அதிகமாக தடவி, சுட்டு எடுக்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum