காரமான... வெஜிடேபிள் தால்
Page 1 of 1
காரமான... வெஜிடேபிள் தால்
பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய பருப்பு வகைகளை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடு இருக்கும். அதிலும் அதோடு காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நல்லது. இப்போது அந்த வகையில் காய்கறிகளுடன், பருப்பை சேர்த்து செய்யக்கூடிய வெஜிடேபிள் தால் என்னும் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 2 (தோலுரித்து, சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நீரில் 20-25 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இந்த பருப்புகளைப் போட்டு, உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் கேரட், குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, 4-6 நிமிடம் நன்கு கேரட் மற்றும் குடைமிளகாய் வேகும் வரை வதக்க வேண்டும்.
காய்கறிகள் வெந்ததும், அதில் தக்காளி, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு அதில் குக்கரில் இருக்கும் பருப்புக் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் மாங்காய் பொடியை சேர்த்து, கிளறி இறக்கிவிட வேண்டும்.
இப்போது காரமான வெஜிடேபிள் தால் ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காரமான... தக்காளி பூண்டு சாதம்
» காரமான மட்டன் மசாலா
» காரமான... காளான் மசாலா
» காரமான சிக்கன் மசாலா
» காரமான மசாலா வேர்க்கடலை
» காரமான மட்டன் மசாலா
» காரமான... காளான் மசாலா
» காரமான சிக்கன் மசாலா
» காரமான மசாலா வேர்க்கடலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum