குரு பகவான் வழிபாடு
Page 1 of 1
குரு பகவான் வழிபாடு
பிரம்மனால் உருவாக்கப்பட்ட சப்தரிஷிகளில் ஒருவர் ஆங்கரீசர். அவருடைய ஏழு பிள்ளைகளில் ஒருவர் பிரகஸ்பதி.சகல சாஸ்திரங்களையும் கற்றறிற்த அவர் பல யாகங்களைச் செய்து மிக உன்னதமான நிலையை அடைந்தார். இவருடைய தகுதியை எண்ணி இவருக்கு தேவ குரு பீடத்தை அளித்தார்கள்.
இந்திரன் முதலான தேவர்களின் சபையில் குருவாகவும் ஆலோசகராகவும் குருபகவான் திகழ்கிறார். நவக்கிரங்களில் குருவுக்குப் பிரதான இடம் அளிக்கப்படுகிறது. குருவின் 5, 7-ம் பார்வை சகல நலன்களையும் தருவதாகும். திருமணத்திற்கு குருபலம் வருவது முக்கியமாகக் கருதப்படுகிறது.
குரு பார்வை பெற்றால்தான் திருமணம். குழந்தை செல்வம், சிறந்த பதவி, சொத்து, சுகம் கிடைக்கும். சாத்வீக குணமும் மஞ்சள் நிறமும் உடைய இவரைப் பொன்னான் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாள சிந்தை உடையவர். தன்னை வழிபடுகிறவர்களுக்குப் பிறரை வணங்காத உயர்வான பதவியையும் மதம் நீதி மனமகிழ்ச்சி புத்திரப்பேறு செல்வம் முதலியவற்றையும் கொடுப்பவர்.
கடல் கடந்து சென்று தொழில் நடத்தவும், செல்வம் சேர்க்கவும் குருவின் அமைப்பு ஜாதகத்தில் பலமாக இருக்கவேண்டும். குரு, சனி, சந்திரன் மூன்றின் அமைப்பு ஜாதகத்தில் நல்ல விதமாக இருந்தாலோ சேர்க்கை ஏற்பட்டாலோ கடல் கடந்து புகழ்பெறவும் செல்வச் சீமான் ஆவதற்கும் வழி வகைகள் தாமாகவே ஏற்படும்.
குருவுக்கும், குரூர தன்மை உண்டு. கெட்டு விட்டால் அவனுக்குச் சாந்தியும் பூஜையும் செய்வது நன்மை பயக்கும் குருவாரம் - வியாழக்கிழமை - விரதம் இருப்பது நல்லது. குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையைச் செய்கிறார். ராசிக் சக்கரத்தை கடக்க பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன.
இதையே மகாமகம் அல்லது மாமாங்கம் என்று கூறுகிறார்கள். கோசாரத்தில் 1,3,4,8,10,12 இல்லங்களில் குரு சஞ்சரித்தால் அது வேதையாகும். ஜாகத்தில் குரு கெட்டிருந்தாலோ குரூரமானவராக இருந்தாலோ, கோசாரப்படி கெட்டவரானாலோ குருவுக்குச் சாந்தி செய்தால் நலம் ஏற்படும். வியாழன் தோறும் விரதம்இருந்து அவரைப் பூஜித்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களைச் செய்யும் ஆற்றல் போன்றவை காணப்படும். குரு பகவான் கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை ஏற்படுத்துவார். குளிர்ச்சியான கப நோய்களை கொடுப்பார்.
அடக்கம், நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொடுப்பார். குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள் கற்றோரையும், பெரியோரையும் மதித்துப் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் காணலாம். மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள்.
உழைப்பதற்குச் சற்றும் தயங்க மாட்டார்கள். இவர்கள் எந்த காரியத்தையும் அவசரப்பட்டுச் செய்ய மாட்டார்கள். நன்கு சிந்தித்துப் பார்த்து முடிவு செய்த பிறகே செயலில் இறங்குவார்கள். குறுக்கு வழியிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியிலோ பணம் சம்பாதிக்க ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். குரு சுக கிரகங்களில் வலிமை பெற்றவன்.
இவன் சுப ஆதிபத்யம் பெற்றவர்களுக்கு ஆட்சி உச்சம் நட்பு சமம் பெற்று சுபஸ்தானங்களில் நின்றிருந்தால் அதன் தசையில் நற்பலன்களே நடக்கும். மாறாக இருப்பின் தீய பலன்கள் நடக்கும். புனர்பூசம், விசாகம், பூராட்டாதி ஆகிய நட்சத்திரமொன்றில் பிறந்தவருக்கு குரு தசையே ஆரம்பமாக நடக்கும்.
பொதுவாகவே குரு மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு ஆதிபத்ய அடிப்படையில் யோகமளிக்க வல்லவன். அதனால் இந்த லக்னத்தாருக்கு குரு சுபஸ்தானங்களில் வலுப்பெற்றிருந்து தசை நடைமுறைக்கு வருமானால் யோகமான பலன்களையே அளிப்பான். மாறாக யோகமளிக்க வல்ல லக்னத்தாருக்கு பகை, நீசம்.
மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்து தசை நடத்த நேர்ந்தால் யோகப் பலன்கள் யாவும் குறைந்து விடும். குரு கோட்சார ரீதியாக ஜென்மராசிக்கு 2,5,7,9,11 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும் மற்ற ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது கெடுபலன்களையும் அளிப்பான்.
குரு தசை நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க ஆதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வரவேண்டும். குரு பகவான் தமிழகத்தில் மூன்று தலங்களுக்குச் சென்று ஈஸ்வரனை பூஜித்துப் பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஒன்று தென் குடித்திட்டை என்ற தலம். இது மாயாவரத்திற்கும், தஞ்சைக்கும் இடையிலுள்ளது.ரெயில் நிலையத்தின் பெயரும் திட்டைதான். திருஞான சம்பந்தர் இங்கே சென்று பசுபதி நாதரையும் உலக நாயகியையும் பாடிப்பேறு பெற்றிருக்கிறார். இரண்டாவது தலம் திருவலிதாயம் என்பது. சென்னைக்கு அருகே இருக்கும் இத்தலத்திற்கு பாடி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
திருஞான சம்பந்தப் பெருமாள் இங்கு எழுந்தருளியிருக்கும் வலிதாயநாதரையும், தாயம்மையையும் பாடிப் பரவசமடைந்திருக்கிறார். குரு பகவான் இந்தத் தலத்திற்கு வந்து தல மூர்த்தியை வணங்கிப் பூஜித்துப் பெருமை பெற்றதாக வரலாறு. நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளியிருப்பவர் குரு பகவான்.
ரதத்தில் வில்லும், மீனும் அடையாளமாயிருக்கும். இவருக்கு உகந்த தானியம் கடலை, பிடித்த கல் புஷ்பராகம். பிடித்த மலர் முல்லை. சமித்து அரசு. இவருக்கு பிடித்த சுவை இனிப்பு. குரு பகவானை வழிபட்டால் புகழையும், கீர்த்தியையும் வாக்கு வன்மையையும் அளிப்பார்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» குரு பகவான் ஸ்லோகம்
» குரு பகவான் ஸ்லோகம்
» குரு:வழிபாடு,பரிகாரம்
» குரு வழிபாடு- பரிகாரம்
» பதவி, அதிகாரம் தரும் குரு பகவான்
» குரு பகவான் ஸ்லோகம்
» குரு:வழிபாடு,பரிகாரம்
» குரு வழிபாடு- பரிகாரம்
» பதவி, அதிகாரம் தரும் குரு பகவான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum