தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீங்க என்ன ரகம்--- அப்பமா?, புண்ணாக்கா?, புளியா? !

Go down

நீங்க என்ன ரகம்--- அப்பமா?, புண்ணாக்கா?, புளியா? ! Empty நீங்க என்ன ரகம்--- அப்பமா?, புண்ணாக்கா?, புளியா? !

Post  meenu Tue Feb 05, 2013 5:33 pm

மனிதனுக்கு குணங்கள் மூன்று. சத்துவ, ராஜஸ, தாமத குணங்கள்தான் அவை. இந்த மூன்று குணங்களும் உணவினாலேயே அமைகின்றன

- இப்படிச் சொல்பவர், திருமுருக கிருபானந்த வாரியார்.

""உண்ணும் உணவைப் பொறுத்து ஒவ்வொருவருடைய எண்ணங்கள் அமைகின்றன. நீ உண்ணும் உணவு எவ்வகையோ, உன் எண்ணங்கள் அவ்வகையே. உன் எண்ணங்கள் எவ்வகையோ உன் கடவுளும் அவ்வகையே,''என்று பகவான் பாபா அடிக்கடி கூறுவதுண்டு. தாமஸ குணங்களைத் தூண்டும் உணவுவகைகளால் சோம்பல்,கீழான சிந்தனைகள், மூர்க்கத்தன்மை, வன்முறை போன்ற விலங்கு குணங்கள் உண்டாகின்றன. ராஜஸ குணத்தை தூண்டும் உணவு வகைகள் உண்பவர்கள் எச்செயலில் ஈடுபட்டாலும் ஆதாயம், லாபநோக்கம் கருதியே ஈடுபடுவர். எப்போதும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற எல்லையற்ற உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருப்பர். எதிர்பார்ப்பு இல்லாமல் எச்செயலிலும் இவ்வகை மனிதர்கள் ஈடுபட முடியாது. சாத்வீக உணவு வகைகளான பழங்களை உண்டு வந்தால் அமைதி, சத்சங்கம், ஆன்மிக எண்ணங்கள் ஒருவரிடம் தழைத்தோங்கும். அன்பு அருள் பெருகிவரும். முகத்தில் அமைதி தவழும். உண்ணும் உணவுவகைகள் நம் எண்ணங்களைக் கட்டுப் படுத்தும் சக்தி படைத்தவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. ""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்,'' என்பது திருக்குறள். ""மனவுறுதி கொண்டவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பார்கள்'' என்பது வள்ளுவரின் திருவாக்கு. உறுதியான சங்கல்பம் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் அருள் சேர்ந்தால் மட்டுமே நாம் தொடங்கிய செயல்கள் நல்ல விதத்தில் நிறைவேறும்.

எனவே, நாம் கடவுளிடம், ""இறைவா! நிறைவான நல்ல எண்ணங்களைக் கொடு. உறுதியான சங்கல்பத்தையும், வைராக்கியத்தையும், இச்சாசக்தியையும் எனக்குத் தந்தருள்வாயாக! என்னுடைய சிந்தனை எப்போதும் உன்னை மையமிட்டபடியே சுற்றிக் கொண்டிருக்கட்டும். என்னை எப்போதும் ஆசீர்வதிப்பாயாக!''என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

"என் செயலை நான் வணங்குகிறேன். நான் செய்யும் செயலை பூரணமாக கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன்'என்று எண்ணத்தோடு செயல்களைச் செய்து வரவேண்டும்.

மனவுறுதி இருப்பவனிடம் திரிகரண சுத்தி உண்டாகும். திரிகரண சுத்தி கைவரப்பெற்றால் சங்கல்பத்தை அடையலாம். இதையே இச்சாசக்தி என்று குறிப்பிடுவர். நாம் அனைவருமே மன

உறுதியை வளர்த்துக் கொண்டால் எந்தத் துறையிலும் நினைத்ததைச் சாதிக்கும் வலிமை பெறுவோம். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் உயர்வு உடையதாக அமைந்து, கடவுளின் ஆசியும், அருளும் இணைந்து விடும் போது நாம் செய்கின்ற செயல் ஒவ்வொன்றும் ஒரு வழி பாடாக அமைந்து விடும். அத்தகைய நிலையை நாம் அடைவோம்.
--பகவான் பாபா

முக்குண இயல்புகள்

சத்துவ குணவியல்பு தேவ குணம்:


அன்பு, அமைதி, அறநெறி, நன்மைகளையே நோக்கும் தன்மை, நெறி பிறழாமை , தனக்கென வாழாமை , உயரிய நோக்கம், உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை, பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல், பற்று, பயம், கவலை, எதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .


அவல், பொரி, அப்பம், பழம், பால், தேன் போன்ற உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன. சாந்தம், அன்பு,அடக்கம், பொறுமை, கருணை போன்றவை சத்துவ குணத்தால் வருகின்றன

தமோ குணவியல்பு (மிருக குணம் ) :

காமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள். தன்னலம் ,பெருமை, பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் ,தர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள்.


பழையது, புண்ணக்கு, மாமிசம் போன்ற உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன. தூக்கம், சோம்பல்,மயக்கம் போன்றவை தாமத குணத்தால் வருகின்றன

ரஜோ குணவியல்பு :
ஆளுமைத் தன்மை, அடக்குதல், அடங்காமை, மேலாண்மை,சுகபோகம்நாடல், இரக்கமில்லா அரக்க குணம்,தோல்விபயம், எளிமை விரும்பாமை, எளியோரை மதியாமை, படாடோப வாழ்க்கை, வஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள், மிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள். தற்புகழ்ச்சி விரும்பிகள், பிறர் தலைமை விரும்பாதவர்கள்.

காரம், புளி, ஈருள்ளி வெங்காயம், முள்ளங்கி போன்ற உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன. கோபம், டம்பம், வீண் பெருமை, அகங்காரம் போன்றவை இந்த ராஜஸ குணத்தால் வருகின்றன.

முக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.

தேவர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல .

சத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன.

முக்குணங்களில் எக்குணம் மேலோங்கி இருக்கிறதோ
(விழுக்காடு அதிகப்பட்டிருக்கிறதோ ) அதுவே அவர்களின் முக்கிய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன.
தீமை அளிக்க வல்ல , பாவங்களைப் புரிய வைக்கும் ரஜோ ,தமோ குணங்களின்றும் சத்துவ குணம் மேலோங்கி சத் புருஷர்களாக நம்மை மாற்றவல்ல சக்தி வழி அல்லது முறை தான் என்ன?
யோகத்தினால் மட்டுமே அது இயலும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர
» நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?
» நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?
» குழந்தைகளின் சளித் தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
» பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்க பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum