தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குபேர லிங்கம்

Go down

 குபேர லிங்கம்  Empty குபேர லிங்கம்

Post  amma Sat Jan 12, 2013 6:35 pm


முக்தித்தலமான திருவண்ணாமலையில் குபேர திக்கான வடக்கு பாக திருச்சுற்றில் இந்த லிங்கம் உள்ளது.ஒரு சமயம் குபேர பகவான் தியானத்தில் ஆழ்ந்த நிலையில் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கும்பிட்ட நிலையில் திருவண்ணாமலையைப் பலயுகங்களாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அச்சமயம் அவருக்கு அருணாச்சலேஸ்வரர் காட்சி அளித்து அருள் கொடுத்தார். அந்த இடத்தில் ஒரு லிங்கத்திருமேனி தோன்றியது. அதை பக்தியுடன் குபேரன் வழிபட்டு அதிக வளமும் வன்மையும் பெற்றார். இதுவே குபேர லிங்கமாக உள்ளது.

இந்த லிங்கத்தை வழிபடுவோருக்கு செல்வம் சேரும் என்றும் முறையில்லாத வழியில் பணம் சேர்த்தவர்களது பாவங்கள் விலகும் என்றும் நம்பிக்கை. அத்துடன் நிருதிலிங்கதலத்திற்கு அடுத்ததாக நவலிங்கக் கோயில் உள்ளது. இவற்றில் சொர்ணலிங்கம் என்ற விசேஷ லிங்கமும் நிதிகள் சேரும் வழிபாட்டுக்குத் தொடர்புடையதாக உள்ளது.''
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum