வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!!
Page 1 of 1

வரலட்சுமி நோன்பு என்றால் அனைத்து வீடுகளிலும், விரதம் இருந்து, மாலை வேளையில் வடை பாயாசத்துடன் உணவுகளை செய்து, கடவுளை வணங்கி பூஜைகளை செய்து, தன் விரதத்தை முடிப்பார்கள். மேலும் வீடுகளுக்கு சுமங்கலியை அழைத்து, தம்மால் முடிந்த மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றோடு, வீட்டில் செய்யும் இனிப்புகளையும் கொடுத்து அனுப்புவர். அவ்வாறு வீட்டில் செய்து கொடுக்கும் இனிப்புகளில் பால் பாயாசம் மிகவும் சிறப்பானது. அந்த பால் பாயாசத்தை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
சேமியா - 50 கிராம்
ஏலக்காய் - 4
பாசிப்பயறு - ஒரு கைப்பிடி
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 10
பாதாம் - 10
உலர் திராட்சை - 10
குங்குமப்பூ - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு, தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சேமியாவை சேர்த்து, ஓரளவு வேக வைக்கவும். பின் அந்த சேமியாவில் உள்ள நீரை வடித்து விடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பயறு போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்று பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் ஏலக்காயை நன்கு தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும். பின்பு அதில் குங்குமப்பூவை சேர்த்து, தீயை சிம்மில் 2 நிமிடம் வைக்கவும்.
பிறகு அதில் சேமியா மற்றும் அரைத்து வைத்துள்ள பாசிப்பயறு பொடியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இப்போது வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற சுவையான பால் பாயாசம் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!
» ஓணத்திற்கு ஏற்ற இனிப்பான... அடை பாயாசம்!!!
» பனங்கற்கண்டு பாயாசம்
» சமையல்:பனங்கற்கண்டு பாயாசம்
» பாயாசம் (பொது அறிவுப் புதையல்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum