மகர லக்கினத்தில் பிறந்தவர்
Page 1 of 1
மகர லக்கினத்தில் பிறந்தவர்
மகரம்:
1. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய திருவாதிரை, புனர்பூசம், அனுசம், கேட்டை நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
2. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தின கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும் அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், சதயம், சுவாதி, பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
4. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, அசுவனி, மூலம், பரணி, பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. மகர லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள், மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க, நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.
6. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க, திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த ரோகிணி, அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
8. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ்பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் மகம், பூரம்.
9. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும் ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும் உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் தொடங்கவும், தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், திருவோணம், ரோகிணி, அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலைதுவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப பெற்றுக்கொள்ளவிண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும், தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். திருவாதிரை, சதயம், புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
11. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும், தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றி பெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள்சங்கங்கள் ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும் உகந்த நட்சத்திரங்கள் - உத்திரட்டாதி, ரேவதி, அனுசம், கேட்டை ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
12. மகர லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டிய நட்சத்திரங்கள் மகம், மூலம், பூரம், பூராடம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கேது
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கிரகங்கள்
» லக்கினத்தில் கேது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum