சனி வழிபாடு
Page 1 of 1
சனி வழிபாடு
சனி பகவான் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவர். இவருடன் சார்வார்ஷன்மனு, பத்திரை என்ற பெண்ணும் பிறந்திருக்கிறார்கள். ஆனால் எல்லாருக்கும் சனியைத்தான் தெரியும். கிரகங்களுள் ஏழாவது கிரகமாக அங்கம் வகிக்கும் கிரகம் சனி பகவானாகும். ஈஸ்வரனை நோக்கி கடுந்தவம் புரிந்து வான மண்டலத்தில் தனக்கும் இடம் பெற்றார் சனீஸ்வரர்.
சனி பாபக் கிரகங்களில் முதல் இடம் பெற்று கெடுபலன்களை வழங்க சிவன் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால் சனியின் இயற்கையான குணம் மிகமிக நல்லது. சனி திசை ஒருவருக்கு நல்லதாக அமைந்து விட்டால் அவரைப் போல அதிர்ஷ்டத்தை வாரிக்கொடுக்க யாராலும் முடியாது. இவர் கரிய நிறமுள்ளவர்.
அதனால் இவருக்குக் காரி என்ற பெயர் வழங்குகிறது. இவரது கால் ஊனமானபடியால் மெதுவாக நடந்து செல்வார். இதனால் சனைச்சரன் என்ற பெயரும் மந்தன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என்ற 3 மனைவி உள்ளனர். இவர் ஆயுள்காரகர்.
மற்றும் இரும்பு எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்கும் காரகர் அவரவர் பலாபலன்படி வறுமை, கலகம், நோய் அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர். நீதிக்குப் புறம்பாக சனிபகவான் நடக்கவே மாட்டார். மேலும் ஒருவர் ஜாதகத்தில் சனி கொடியவராக இருந்தாலும் அவர்கள் சனிபகவானை பூசித்து வலம் வந்து கொண்டிருந்தாலும் கொடிய குணத்தை மாற்றிக் கொண்டு அளவற்ற நன்மைகளைச் செய்வார்.
சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை. அவர் ஒருவனைக் கெடுத்தாலும் அவருடைய ஜாதக ரீதியாக பிறகு பறித்த அனைத்தையுëம் அதற்கு மேலும் கொடுத்து விட்டே செல்வார். சனி பகவான் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலி கிரகமாகக் கருதப்படுகிறார். அவர் வைராக்கியம் நிறைந்தவர்.
அவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களுக்கு வீண்பழி, அவமானம், அக்கிரமம், வறுமை, உடல் காயங்கள், நீசமக்களின் தொடர்பு, அடிமை நிலை, சூது, பயம், துக்கம் போன்றவற்றைத் தருவார். வாழ்க்கையில் நிலையான தன்மை, வாழ்க்கை வசதிகள், சிறைவாசம் போன்றவற்றை ஏற்படுத்துவார். மற்றவர்களை இழிவாக பேச வைப்பார். விவசாயத்தில் ஈடுபடச் செய்வார்.
ஆயுள், நரம்புகள், கந்தைத் துணி, மேற்குத் திசை, வாத நோய், எள், எண்ணெய், விருப்பமற்ற போக்கில் செல்லும் மனம் ஆகியவற்றுக்கு சனி பகவான் அதிபதியாக விளங்குகிறார். சனி மற்ற கிரகங்களைக் காட்டிலும் தனித்தன்மை பெற்றவன். தன் தசையில் அளிக்கும் செழிப்பை அழியவிட மாட்டான்.
அவன் தன் திசையில் பிற்பகுதியில் தான் மேலான பலன்களை அளிப்பான். அவன் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் இருந்து பன்னிரு ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகளானிகின்றன. இத்தகைய மந்தமான போக்கு வேறு கிரகங்களுக்கு கிடையாது. அதனால் இவனால் ஏற்படும் பலன்கள் நீண்ட நாட்கள் இருக்கும்.
அதே நேரத்தில் ஒரு ராசியில் இருக்கும் போது நற்பலனை அளிப்பதில் மட்டும் அவசரப்படுவதில்லை. இரண்டரை ஆண்டுக்குள் பிற்பகுதியில் நிதானமாக அளிப்பான். ஆனால் அழியாத நிலையில் அளிப்பான். எனவே முப்பது ஆண்டு காலத்தில் இவரது பிடியில் அகப்படாதவர் எவரும் இல்லை. அது பற்றி முப்பதாண்டு வாழ்ந்தவனும் இல்லை.
முப்பதாண்டு கெட்டவனும் இல்லை என்று பழமொழி வழங்குகிறது. ஆஞ்சநேயரைச் சனிக்கிழமைகளில் வழிபட்டு வருவதாலும், நீலக்கல்லைத் தரித்துக் கொள்வதாலும், கருப்பு நிற வஸ்திரத்தையும் எள்ளையும் தானம் கொடுப்பதாலும், சனிக்கிழமைகளில் எள் எண்ணெய்த் தீபமிட்டு சனி பகவானுக்கு அருச் சனை செய்வதாலும் சனிக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
ஏழரை நாட்டுச் சனியின் காலத்தை மூன்று பிரிவாக கூறலாம். சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் போது விரைய சனி என்றும் ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்ம சனி என்றும் 2-ல் சஞ்சரிக்கும் போது குடும்பச் சனி என்றும் கூறுவர். ஏழரை நாட்டுச்சனி காலம் போராட்டம் நிறைந்த காலமாகும். அதைப்போன்று சந்திரன் நின்ற ராசிக்கு நான்காமிடத்தில் சனி பிரவேசிக்கும் போது அர்த்தாஷ்டம் சனி என்பர்.
இதுவும் வேதனையும் சோதனையும் நிறைந்ததே. தாயாருக்கும் தாயாரின் வழி உறவினர்களுக்கும் ஆகாது. கல்வியில் தடை வீடு, நிலம் வகையில் தொல்லை, சுகத்திற்கு கேடு போன்ற இன்னல்கள் ஏற்படும். அடுத்ததாக கண்டச்சனி என்ற ராசிக்கு ஏழாமிடத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தைக் கூறுவர்.
குடும்பத்தில் குழப்பம், மனைவி கணவனிடையே விரிசல். பணக்கஷ்டம், கடன் தொல்லை போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். அஷ்டமத்துச்சனி என்று எட்டாமிடத்து சனியைக் கூறுவர். ஏழரை நாட்டுச்சனி காலத்தில் ஏற்படும் தொல்லைகளும் வேதனைகளும் இக்காலத்திலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விபத்துகளும் உயிருக்கு கண்டமும் ஏற்படும்.
முயற்சிகளில் தோல்வியும், எடுக்கும் காரியங்களில் ஏமாற்றமும், சுகக்கேடும் ஏற்படும். இவ்வாறு சனி 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் கோட்சார ரீதியாக வந்தால் நல்லதில்லை அத்துடன் 5,9,10 ஆகிய ஸ்தானங்களில் நின்றாலும் பெரிய அளவில் நன்மையான பலனை அளித்து விட மாட்டான். தீமையான பலன்களும் கலந்தே நடக்கும். அதனால்தான் கெடுப்பதில் வல்லவன் சனி என்று கூறுகின்றனர்.
இந்த கோரமான பிடியிலிருந்து விடுபட சனீஸ்வர பகவானுக்கு சாந்தி செய்ய வேண்டும். திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு உரிய ஸ்தலமாகும். அங்கு சென்று புனித நீராடினால் பலன்கள் கிடைக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum