தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வங்கள் அருளும் ஐஸ்வர்ய தீபங்கள்

Go down

 செல்வங்கள் அருளும் ஐஸ்வர்ய தீபங்கள் Empty செல்வங்கள் அருளும் ஐஸ்வர்ய தீபங்கள்

Post  amma Sat Jan 12, 2013 6:29 pm



நாம் எல்லோரும் தீபத்தைச் சரியாக ஏற்றினால் அதன் பலன் விரைவாக கிடைக்கும். பெண்கள் வாரம் ஒருமுறையாவது பாசி பிடிக்காமல் வியாழன் அன்று தீபங்களைக் சுத்தம் செய்தல் வேண்டும். தீபத்திற்கு கலப்பட, மட்டமான எண்ணையை பயன்படுத்தலாகாது.

குடும்பம் உள்ளவர்களைத் திட்டிக் கொண்டே ஏற்றாமல்
சுவர்ண விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
சுதாண்ய விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
என்று மங்களகரமான மந்திரம் கூறி ஏற்ற வேண்டும்.

ஸ்ரீ லட்சுமியை அழைப்பதாகக் கூறப்பட்ட தீபமேற்றும் சுலோகம் இது. தீபங்களில் பல வகைகள் உண்டு. மகா தீபம், அலங்கார தீபம், நாக தீபம், வ்ருஷதீபம், புருஷாமிருக தீபம், ஓல தீபம், கமட தீபம், கனு தீபம், வியாக்ரதீபம், சிம்ஹ தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம், பஞ்ச தீபம் ஆகியவை.

சிவ ஆலயங்களில் சாயரட்சை பூஜையின் போதும் உற்சவ காலங்களிலும் காட்டப்படுகின்றன. வீடுகளில் காமாட்சி தீபம், பஞ்சமுக தீபம் (குத்து விளக்கு) ஏக முக தீபம், தூங்காணை தீபம், மாட தீபம், சங்க தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. ஐஸ்வர்ய தீபம் எனப்படும் நடுவில் புனல் உள்ள தீபத்தை ஒரு சிலரே கேரளப் பகுதிகளில் ஏற்றுகின்றனர்.

இதன் மகிமையும் சக்தியும் பலருக்குச் தெரியாமல் உள்ளது. சந்தியா காலம் என்ற சாயங்காலத்தில் மங்களங்கள் கூடவும். ஆயுள் பெருகவும் மாலையில் சந்தியா தீபம் ஏற்றுகிறேன் என்று சொல்லி பெண்கள் தீபமேற்ற வேண்டும். செங்குத்து நிலையில் தண்டு போல உள்ள தீபங்கள் எண்ணையுடன் நமது கஷ்டங்களையும் உறிஞ்சி இறைவன் முன் நிறுத்தி அழிப்பவையே கமல தீபம் எனும் ஐஸ்வர்ய தீபம்.

இதில் கமலாத்மிகாவா தேவி ஐஸ்வர்ய லட்சுமி தீபம் ஏற்றும் போதே எண்ணை வடிவிலும், திரிவடிவிலும் ஒளி வடிவிலும் வந்து விடுகிறாள். ஆகவே 16 வளங்களும் தரக்கூடிய இந்த ஐஸ்வர்ய தீப பூஜைக்கு உகந்த விளக்கு ஒன்று உள்ளது. கேரளத்தில் கமல தீபம் என்று அழைக்கப்படும் இதன் வடிவம் வித்யாசமாக உள்ளது.

வரி வடிவங்களோடு கூடிய அடித்தட்டு ஒரு குளம் போலக் காட்சி அளிக்கும். அதில் தாமரை மலர்ந்திருப்பது போல நடுத்தண்டுடன் ஒரு குழாய் வடிவம் அதன் நடுவில் திரியிட்டு எண்ணை விட்டு ஏற்ற வேண்டிய இடம் தீபத்தை இறைவனுக்குக் காட்ட சுட்டுவிரல் நுழைய ஒரு மாதிர வடிவம்.

16 லட்சுமிகளை தீபம், அடியில் சிறு வட்ட வில்லையில் பீஜங்களை ஸ்தாபிக்க வேண்டும். இந்த கமலாத்மிகா தீபமான கமல தீபத்தை 12 எண்ணிக்கையில் மாதம் ஒன்றாக பூஜிப்பது சிலர் வழக்கம். (பட விளக்கம்) இவ்விளக்கை 16 எண்ணிக்கையில் வாங்கி ஒரு பவுர்ணமியிலோ அஷ்டமி தினத்திலோ பூஜையைத் தொடங்கலாம்.

இரு மனைப் பலகையில் கமல வடிவமான திருமகள் கோலமிட்டு அல்லது பட்டுப்புடவை ஒன்றின் மேல் அரிசியை ஒரு விளக்குச் சிறு குவியலாக வைத்து பூ போட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். பூஜைக்குரிய பொருட்களாக, பசும்பால், தேங்காய் மூன்று வித பழங்கள், தாம்பூலம், துளசி, வாசனை மலர்களை வைத்துக் கொண்டு அன்றைய திதி வாரம் நட்சத்திரம் சொல்லி மன குடும்ப ஐஸ்வர்ய லட்சுமி ப்ரஸன்ன அவாப்த்யர்த்தம் என்று பன்னிரு மாத பவுர்ணமி அல்லது தமிழ் மாத கணக்கில் வளர்பிறை அஷ்டமிக்கு பூஜை தொடங்க வேண்டும்.

பதினாறு விளக்குகளை வைத்து பூஜை செய்வதால் (16 லட்சுமிகளை) வீட்டுக்கு அழைப்பதாக பொருள். ஓம் கௌர்யை நம, பத்மாயை, சஸ்யை, மேதாயை, சாவித்ரியை, விஜயாயை, ஜயாயை, வேதஸே நாயை, ஸ்வாஹாயை, ஸ்வதாயை, மாத்ருப்யோ, லோக மாத்ருப்யோ, த்ருத்யை, புஷ்ட்யை, துஷ்ட்யை, ஆத்ம தேவ்யை நம : என்று 16 மாத்ரு கணங்களை மகாலட்சுமி அம்சமாக பூஜிக்கவும்.

பிறகு பஞ்சோபசாரங்கள் செய்து பதினாறு லட்சுமிகளுக்கும் பீஜ தேவதைக்கும் குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆவாகன பூஜைகள் முடிந்த பிறகு விஜேஸ்வர்ய லக்ஷ்மி மாலா மந்திரங்களை 16 தரம் ஜபம் செய்து மங்கள ஹாரதி எடுக்கவும். சௌபாக்ய அர்ச்சனை செய்வது மிக விசேஷம்.

ஓம் நமோ பகவதீ ஸர்வலோக வசங்கரீ முதல் நமோஸ்துதே ஹூம் பட் ஸ்வாஹா வரை எளிதாக சொல்ல 27 நட்சத்திரக் காரர்களுக்கும் மகா லட்சுமிதேவியின் சிந்தாமணி மந்திரங்கள் உண்டு. அவை இன்னும் அதிக பலன்களைத் தரவல்ல எல்லோருக்கும் பொதுவாக, ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்ஸெள : ஜகத் ப்ரஸூத்யை சௌபாக்கிய லட்சுமி நம, ஏஹி ஏஹி ஸர்வ ஸெள பாக்யம் தேஹி ஸ்வாஹா என்று 108 தடவை ஜபிக்கலாம்.

பகவதி வழிபாட்டில் முக்கிய அங்கமாக திகழும் இந்த ஐஸ்வர்ய தீப பூஜையை செய்ய குடும்பத்தில் செல்வப் பேறும் குடும்பத்தில் முன்னேற்றமும் பெறக் காண்பீர். பக்தி சிரத்தையுடன் பூஜை செய்த பெண்களுக்கு திருமணப் பேறும் சத் புத்ர சந்தானமும் கிடைக்கும். ஒரு வருடத்திற்குள் நல்ல மாற்றங்களை நிகழ்த்தும் ஐஸ்வர்ய தீபங்களை பூஜித்து நிறை காண நல்லாசிகள்!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum