சுவையான சிக்கன் சுக்கா ரெசிபி
Page 1 of 1
சுவையான சிக்கன் சுக்கா ரெசிபி
கோழிக்கறியை பல விதங்களில் செய்யலாம். எப்படி செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் உலர்வாக சுக்கா போல செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலோடு சாப்பிடுவார்கள். மிதமான காரம் கொண்ட இந்த சிக்கன் சுக்கா அனைவருக்கும் ஏற்றது.
தேவையான பொருட்கள்
சிக்கன் -- அரை கிலோ (சிறிதாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் -- 2
இஞ்சி பூண்டு விழுது 3 டீ ஸ்பூன்
வரமிளகாய் – 7
மிளகு தூள் -- 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் -- 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை – அரை கட்டு
எண்ணைய் – 5 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக் கேற்ப
சுக்கா செய்முறை
சிக்கனில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும் . பின்னர் உப்பு போட்டு நன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும், வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு போட்டு வாசனை போக வதக்கவும். அதோடு கோழிக்கறியை போட்டு நன்றாக வதக்கவும் அதன் மேல் மஞ்சள் தூள் போட்டு நான்றாக கிளறவும். வரமிளகாயை கிள்ளிப் போட்டு நன்றாக கிளறி லேசாக தண்ணீர் தெளிக்கவும். பின்னர் மூடிபோட்டு 15 நிமிடம் வேக விடவும். பொடியாக நறுக்கியதால் சிக்கன் நன்றாக சுருண்டு வெந்திருக்கும். அப்போது மிளகு, சீரக தூள் தூவி கிளறி மிதமான தீயில் வைக்கவும். சுவையான சுக்கா சிக்கன் ரெடி. இதன் மேல் மல்லித்தலை தூவி பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான... உருளைக்கிழங்கு சுக்கா
» ஹக்கா சில்லி சிக்கன் - சைனீஸ் ரெசிபி
» மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி
» சுவையான கடாய் சிக்கன்
» சுவையான... சிக்கன் சாலட்!
» ஹக்கா சில்லி சிக்கன் - சைனீஸ் ரெசிபி
» மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி
» சுவையான கடாய் சிக்கன்
» சுவையான... சிக்கன் சாலட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum