தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உரோமரிஷி உரோமரிஷி

Go down

உரோமரிஷி உரோமரிஷி Empty உரோமரிஷி உரோமரிஷி

Post  amma Sat Jan 12, 2013 6:21 pm

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோம முனி என்று பெயர் பெற்றார். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை வியாநகரும், முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.

புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம். ரோமரிஷி படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும்.

ஜாதி புஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூல மந்திரமான "ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி'' என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும்.

பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். ரோமரிஷி சித்தர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால், மனோன்மணி சதக்கி பெருக வேண்டுமென்றால், சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும்.

இவரை முறைப்படி வழிபட்டால் மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கும். படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். இவரை திங்கள்கிழமை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.*
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum